மத்தியப்பிரதேசத்தில் ரயில் தடம் புரண்டது

0
16

போபால், ஏப் 15-
மத்தியப்பிரதேசதில் கட்னியிலிருந்து சோபான் செல்லும் ரயிலின் ஐந்து பெட்டிகள் தடம் புரண்டதில் 12 பேர் காயமடைந்துள்ளனர்.

கட்னியிலிருந்து சோட்னா நோக்கி ரயில் தினமும் இரவு 9.25 மணிக்கு புறப்படும். வழக்கம்போல் நேற்று இரவு கட்னியிலிருந்து ரயில் புறப்பட்டு சென்றது. சல்னா மற்றும் பிபரியகாலா ரரயில் நிலையங்களுக்கு இடையே இந்த ரயிலின் ஐந்து பெட்டிகள் திடீரென தடம் புரண்டன.

இதில் 12-க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயம் அடைந்தனர். இச்சம்பவம் குறித்து தகவலறிந்த மீட்பு படையினர் அங்கு விரைந்தனர். காயமடைந்த பயணிகள் தற்போது மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.இச்சம்பவம் குறித்து ரயில்வே உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.