இன்று உங்களது ராசி பலன்

0
16

மேஷம்

இன்று நீங்கள் புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும். வழக்கமான பணிகளிலும் கூடுதல் கவனம் தேவை. சிலருக்கு எதிர்பாராத வீண் செலவுகள் ஏற்படக்கூடும். எதிர்பார்த்த காரியம் நிறைவேறுவதில் தாமதம் ஏற்படும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். சக பணியாளர்களின் விஷயங்களில் குறுக்கிடவேண்டாம். வியாபாரம் சுமாராக இருக்கும்.

 

ரிஷபம்

இன்று உங்களுக்கு எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும். சிலருக்கு வாழ்க்கைத்துணையால் எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. உங்களது உறவினர்கள் வருகையால் சுபநிகழ்ச்சி ஒன்று ஏற்பாடாக வாய்ப்பு உண்டு. கணவன் – மனைவிக்கிடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும். மனதில் இனம்புரியாத மகிழ்ச்சி நிலவும். அலுவலகத்தில் உற்சாகமாகச் செயல்படுவீர்கள். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் அதிகரிக்கும்.

 

மிதுனம்

இன்று உங்களுக்கு அதிர்ஷ்டகரமான நாளாக அமையும். இன்று நீங்கள் எடுக்கும் புதிய முயற்சி வெற்றிகரமாக முடியும். தொடங்கிய காரியங்கள் அனுகூலமாக முடியும். உங்களுடைய முயற்சிக்கு வாழ்க்கைத்துணை பக்கபலமாக இருப்பார். வாழ்க்கைத்துணை வழி உறவினர்களால் ஆதாயம் உண்டாகும். அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலை காணப்படும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.

 

கடகம்

உங்களது தந்தையின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பூர்விகச் சொத்து விஷயத்தில் பொறுமை அவசியம். சகோதரர்களிடம் பக்குவமாக நடந்துகொள்ளவும். வாழ்க்கைத்துணையின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். அலுவலகத்தில் உங்களின் சமயோசிதமான ஆலோசனை பலராலும் பாராட்டப்படும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.

 

சிம்மம்

இன்று நீங்கள் சுறுசுறுப்பாகச் செயல்படுவீர்கள். எதிர்பாராத செலவுகள் ஏற்பட்டாலும் தேவையான பணம் இருப்பதால் சமாளித்துவிடுவீர்கள். எதிரிகள் வகையில் எச்சரிக்கையாக இருக்கவும். அலுவல கத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். சக பணியாளர்களிடம் பக்குவமாகப் பழகவும். மேலதிகாரிகளிடம் பேசும்போது பதற்றம் வேண்டாம். வியாபாரம் சுமாராகத்தான் இருக்கும்.

 

கன்னி

இன்று நீங்கள் புதிய முயற்சிகளில் ஈடுபடுவதை தவிர்க்கவும். வழக்கமான பணிகளை மட்டுமே செய்யவும். சிலருக்கு மனதில் இனம் தெரியாத சோர்வு உண்டாகலாம். வெளியூர்ப் பயணம் மேற்கொள்வதைத் தவிர்க்கவும். சிலருக்கு சிறிய அளவில் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படக்கூடும். பிள்ளைகளால் வீண் செலவு ஏற்படக்கூடும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிப்பதால், உடல் அசதி ஏற்படக் கூடும். வியாபாரம் சற்று சுமாராகத்தான் இருக்கும்.

 

துலாம்

இன்று உங்களுக்கு உற்சாகமான நாளாக. வாழ்க்கைத்துணையின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். முக்கியமான முடிவுகள் எதையும் இன்று எடுக்கவேண்டாம். பிள்ளைகள் பிடிவாதம் பிடித்தாலும், அனுசரித்துச் செல்வது நல்லது. அலுவலகத்தில் சக பணியாளர்கள் அனுசரணையாக நடந்துகொள்வார்கள். வியாபாரத்தில் விற்பனை வழக்கம்போலவே காணப்படும்.

 

விருச்சிகம்

இன்று உங்களுக்கு எதிர்பாராத பணவரவாக இருந்தாலும் திடீர் செலவுகளும் ஏற்படும். குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். நண்பர்கள் கேட்கும் உதவியை மகிழ்ச்சியுடன் செய்து தருவீர்கள். எதிரிகள் பணிந்து போவார்கள். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலையே காணப்படும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.

 

தனுசு

இன்று நீங்கள் புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். அரசாங்க வகையில் எதிர்பார்க்கும் காரியம் முடிவதில் தாமதம் உண்டாகும். சிலருக்கு வயிறு தொடர்பான பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்பதால், உணவு விஷயத்தில் கவனமாக இருக்கவும். தந்தை வழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரித்தாலும், சக பணியாளர்கள் உதவி செய்வார்கள். வியாபாரம் வழக்கம்போல இருக்கும்.

 

மகரம்

உங்களது புதிய முயற்சிகளை பிற்பகலுக்கு மேல் தொடங்குவது சாதகமாக முடியும். தாயின் உடல்நலனில் கவனம் தேவை. சிலருக்கு சிறிய அளவில் ஆரோக்கியக்குறைவு ஏற்பட்டு சரியாகும். உறவினர்களுடன் பேசும்போது வீண் மனவருத்தம் ஏற்படக்கூடும் என்பதால், பொறுமையைக் கடைப் பிடிக்கவும். அலுவலகத்தில் சக பணியாளர்களிடம் அனுசரணையாக நடந்துகொள்ளவும். வியாபாரத்தில் சுமாரான நிலையே காணப்படும்.

 

கும்பம்

இன்று உங்களுக்கு அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும். கணவன்- மனைவிக்கிடையிலிருந்து கருத்து வேற்றுமை நீங்கி, அந்நியோன்யம் அதிகரிக்கும். மனதில் தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். காரியங்களில் வெற்றி உண்டாகும். புதிய முயற்சிகளை பிற்பகலுக்கு மேல் தொடங்குவது நல்லது. அலுவலகத்தில் கூடுதல் பொறுப்பு ஏற்படும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்தபடியே இருக்கும்.

 

மீனம்

இன்று நீங்கள் எதிலும் பொறுமையைக் கடைப்பிடிக்கவேண்டிய நாள். தந்தையின் விருப்பத்தைப் பூர்த்தி செய்வீர்கள். முக்கிய முடிவுகளை நன்றாக யோசித்து எடுப்பது நல்லது. சிலருக்கு எதிர்பாராத செலவுகள் ஏற்படக்கூடும் என்பதால் கடன் வாங்கவும் நேரிடும். அலுவலகத்தில் உங்கள் பணிகளை மற்றவர்களிடம் ஒப்படைக்காமல் நீங்களே செய்வது நல்லது. வியாபாரம் சுமாராகதான் இருக்கும்.