பிரான்ஸ் லீக் பட்டத்தை வென்றது பி.எஸ்.ஜி

0
20
பாரிஸ் , ஏப்.16-
பிரான்ஸ் லீக்  கால்பந்துப் போட்டியில் கடந்த ஆறு ஆண்டுகளில் ஐந்தாவது முறையாக லீக் பட்டத்தைக் கைப்பற்றி பாரிஸ் செயின் ஜெர்மைன் சாதனைப் படைத்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை நடந்த ஆட்டத்தில் பி.எஸ்.ஜி , 7 –  1 என்ற கோல்களில் நடப்பு வெற்றியாளரான மொனாக்கோவை வீழ்த்தியது.
இந்த ஆட்டத்தில் ஆங்கல் டி மரியா, ஜியோவானி லொ செல்சொ தலா இரண்டு கோல்களைப் போட்டு அதிரடி படிஅத்தனர். முதல் பாதி ஆட்டத்தின் 14 நிமிடங்களில் பி.எஸ்.ஜி நான்கு கோல்களைப் போட்டு மொனாக்கோவை தடுத்து நிறுத்தியது. பிரான்ஸ் லீக் போட்டியில் பி.எஸ்.ஜி-யைக் காட்டிலும் மொனாக்கோ, நந்தேஸ், செயின் எத்தியேன், மார்சேல், லியோன் அணிகள் அதிகமான லீக் பட்டங்களை வைத்திருக்கின்றன.
பி.எஸ்.ஜி அணியையும் அந்த பட்டியலில் இணைக்க நீண்ட காலம் பிடிக்கும் என அந்த கிளப்பின் பயிற்றுனர் உனய் எமெரி தெரிவித்துள்ளார். இந்த பருவத்தில் ஐரோப்பா முழுவதும் நடைபெற்ற லீக் போட்டிகளில் 100 கோல்கள் அடித்த முதல் கிளப் என்ற பெருமையை பி.எஸ்.ஜி பெற்றிருக்கிறது.
அதிலும் முன்னணி நட்சத்திரம் நெய்மார், கிலியான் எம்பாப்பே காயம் அடைந்துள்ள வேளையில் பி.எஸ்.ஜி இந்த சாதனையைப் படைத்துள்ளது. எனினும் இரண்டு ஆண்டுகள் தொடர்ச்சியாக சாம்பியன்ஸ் லீக் கால்பந்துப் போட்டியின் இரண்டாம் சுற்றில் வெளியேறியது மட்டுமே பி.எஸ்.ஜி அணிக்கு ஒரு பெரும் குறையாக உள்ளது.