ஸ்பெயின் லா லீகா – 3 ஆவது இடத்துக்கு முன்னேறியது ரியல் மாட்ரிட்

0
18
மாட்ரிட், ஏப்.16 –
ஸ்பெயின் லா லீகா கால்பந்துப் போட்டியில், நடப்பு வெற்றியாளரான ரியல் மாட்ரிட் பட்டியலில் மூன்றாவது இடத்துக்கு முன்னேறியுள்ளது. ஞாயிற்றுக்கிழமை நடந்த லீக் ஆட்டத்தில் ரியல் மாட்ரிட் 2 – 1 என்ற கோல்களில் மலாகாவை வீழ்த்தியது.
இந்த ஆட்டத்தில் ரியல் மாட்ரிட் தனது முன்னணி நட்சத்திரங்களான கிறிஸ்டியானோ ரொனால்டோ, கேரத் பேல் ஆகிய இருவரையும் களமிறக்கவில்லை.எனினும் அந்த இரண்டு ஆட்டக்காரர்கள் இல்லாத குறையை இஸ்கோ போக்கியுள்ளார். 29 ஆவது நிமிடத்தில் ரியல் மாட்ரிட்டின் முதல் கோலை இஸ்கோ போட்டார்.
முதல் பாதி ஆட்டம்  1- 0 என்ற நிலையில் முடிந்தது. இரண்டாம் பாதி ஆட்டத்தின் 63 ஆவது நிமிடத்தில் ரியல் மாட்ரிட்டின் இரண்டாவது கோலை கஸ்மிரோ போட்டார். ஆட்டம் முடிவடையும் தருவாயில் மலாகாவின் ஒரே கோலை ரோலன் அடித்தார்.
இந்த வெற்றியின் மூலம் ரியல் மாட்ரிட் பட்டியலில் 3 ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது. பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருக்கும் அத்லேட்டிக்கோ மாட்ரிட்டைக் காட்டிலும் நான்கு புள்ளிகளில் பின் தங்கியுள்ளது.