இன்று உங்களது ராசி பலன்

0
18

மேஷம்

இன்று உங்களுக்கு நல்ல நாளாக அமையும். பிள்ளைகளுக்காக செலவு செய்ய நேரிடும். வெளியில் சாப்பிடுவதைக் கண்டிப்பாகத் தவிர்க்கவும். வீண் செலவுகள் செய்வதை தவிர்க்கவும். அலுவலகத்தில் உங்கள் சமயோசிதமான ஆலோசனை பலராலும் பாராட்டப்படும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் இருக்கும்.

 

ரிஷபம்

இன்று நீங்கள் புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. குடும்பத்தில் உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சியுடன் செலவுகளும் ஏற்படும். உறவினர்களால் எதிர்பார்த்த காரியம் முடியக்கூடும். மற்றவர்களுடன் மனஸ்தாபம் ஏற்படும் என்பதால், பொறுமையாக இருப்பது நல்லது. அலுவலகத்தில் சக பணியாளர்களை அனுசரித்துச் செல்லவும். வியாபாரத்தில் பிரச்னை ஏற்படக்கூடும் என்றாலும் சமாளித்து விடுவீர்கள்.

 

மிதுனம்

இன்று நீங்கள் சாதிக்கும் நாளாக அமையும். தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக்கொள்வார்கள். அவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. அலுவலகத்தில் சக பணியாளர்களின் பணிகளில் உதவி செய்வீர்கள். வியாபாரத்தில் லாபம் கூடுதலாக இருக்கும்.

 

கடகம்

இன்று உங்களுக்கு அனுகூலமான நாளாக அமையும். அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியக்கூடும். தந்தையின் மூலம் ஆதாயம் கிடைக்கும். சகோதரரிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். சிலருக்கு வீண் செலவுகள் ஏற்படக்கூடும். வாழ்க்கைத்துணையின் தேவையைப் பூர்த்தி செய்வீர்கள். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். ஆனால், சலுகைகள் கிடைப்பதால் உற்சாகமாகச் செயல்படுவீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.

 

சிம்மம்

இன்று உங்களுக்கு உற்சாகமான நாளாக அமையும். சுறுசுறுப்பாகச் செயல்படுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். புதிய முயற்சி சாதகமாக முடியும். நீண்டநாள்களாக எதிர்பார்த்த பணம் இன்று கிடைக்கக்கூடும். மாலையில் குடும்பத்துடன் கோயிலுக்குச் செல்லும் வாய்ப்பு அமையும். அலுவலகத்தில் எதிர்பார்த்த சலுகை கிடைப்பதற்கு வாய்ப்பு உள்ளது. வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் வழக்கம்போல இருக்கும்.

 

கன்னி

இன்று நீங்கள் புதிய முயற்சிகள் மேற்கொள்வதை தவிர்க்கவும். காரியங்களில் தடை, தாமதம் ஏற்படக்கூடும். மற்றவர்களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். திடீர் செலவுகள் ஏற்படும். தாயின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். தாய்மாமன் வகையில் எதிர்பார்த்த உதவி கிடைப்பதில் தாமதம் ஏற்படக்கூடும். அலுவலகத்தில் உற்சாகமாகச் செயல்படுவீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.

 

துலாம்

இன்று நீங்கள் எதிலும் சாதிக்கும் நாளாக அமையும். வாழ்க்கைத்துணையால் எதிர்பாராத பொருள் சேர்க்கைக்கு வாய்ப்பு உண்டு. பிள்ளைகளின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். கொடுத்த கடன் திரும்பக் கிடைப்பதற்கு வாய்ப்பு உள்ளது. அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரித்தாலும் அதனை செய்து பாராட்டுப் பெறுவீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.

 

விருச்சிகம்

இன்று நீங்கள் புதிய முயற்சிகளை பிற்பகலுக்கு மேல் தொடங்குவது நல்லது. உங்களது காரியங்களில் அனுகூலம் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். தந்தையின் தேவையை பூர்த்தி செய்வீர்கள். அலுவலகத்தில் உற்சாகமாகச் செயல்படுவீர்கள்.எதிர்பார்த்த சலுகை இன்று கிடைக்கும். வியாபாரம் வழக்கம்போல இருக்கும்.

 

தனுசு

இன்று எதிலும் பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது. எதிரிகளால் தொல்லைகளும், விமர்சனங்களும் ஏற்படக்கூடும். குடும்பத்தில் சிறு சங்கடம் ஏற்படக்கூடும் என்றாலும், அதனால் பாதிப்பு எதுவும் இருக்காது. குடும்பம் தொடர்பான முக்கிய முடிவு எடுப்பதாக இருந்தால் ஒருமுறைக்குப் பலமுறை யோசித்து எடுப்பது நல்லது. அலுவலகத்தில் வழக்கமான நிலையே காணப்படும். வியாபாரம் சுமாராக இருக்கும்.

 

மகரம்

இன்று நீங்கள் புதிய முயற்சிகளையும் பயணங்களையும் தவிர்ப்பது நல்லது. வழக்கமான பணிகளிலும் கூடுதல் கவனம் தேவை. சிறிய அளவில் உடல்நலம் பாதிக்கப்பட்டாலும், உரிய சிகிச்சையினால் உடனே சரியாகிவிடும். உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படக்கூடும் என்பதால், பொறுமை அவசியம். அலுவலகத்தில் பொறுப்புகள் அதிகரித்தாலும், மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள். வியாபாரத்தில் லாபம் எதிர்பார்த்தபடியே இருக்கும்.

 

கும்பம்

இன்று நீங்கள் எதிலும் பொறுமையுடன் செயல்படவேண்டிய நாள். அவசர முடிவுகள் எடுப்பதை தவிர்க்கவும். சிலருக்கு திடீர் பயணம் மேற்கொள்ள நேரிடும். குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். உறவினர்களிடமிருந்து நல்ல செய்தி கிடைக்கக்கூடும். அலுவலகத்தில் வழக்கமான நிலையே காணப்படும். வியாபாரம் சுமாராக இருக்கும்.

 

மீனம்

இன்று நீங்கள் எடுத்த காரியம் அனுகூலமாக முடியும். உறவினர்கள் வகையில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். புதிய முயற்சியை இன்று தொடங்குவது சாதகமாக முடியும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலையே காணப்படும். அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். சக பணியாளர்கள் உங்களிடம் ஆலோசனை கேட்டு வருவார்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.