டார் ஏஸ் சலாமில் இடைவிடாத மழை: வெள்ளத்தில் சிக்கி 9 பேர் பலி

0
15

டார் ஏஸ் சலாம், ஏப் 17-

தான்சானியாவின் தலைநகரமான டார் ஏஸ் சலாமில் தொடர் மழையின் காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் 9 பேர் சிக்கி மாண்டனர்.

கடந்த சில தினங்களாக அப்பகுதியில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள உள்ள வீடுகளிலும், சாலைகளிலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதுவரை இந்த வெள்ளத்தில் 9 பேர் சிக்கி உயிரிழந்துள்ளனர்.

கடந்த மூன்று நாட்களாக பெய்த கனமழையில் நகரில் உள்ள பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. பெரும்பாலானோர் வீடுகளின் மேற்கூரையில் தங்கியுள்ளனர் என மீட்புப்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நகரில் உள்ள முக்கிய சாலைகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் மழை தொடர்ந்து பெய்யும் என்பதால் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ளனர்.

மே மாதம் வரை டார் ஏஸ் சலாம் பகுதியில் பலத்த மழை பெய்யும் என அந்நாட்டு வானிலை மையம் ஏற்கனவே தகவல் வெளியிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.