வியாழக்கிழமை, ஜூன் 20, 2019
அண்மையச் செய்திகள்
முகப்பு > விளையாட்டு > பிரீமியர் லீக் – தகுதி இறக்கத்தை நெருங்குகிறது ஸ்டோக் சிட்டி !
விளையாட்டு

பிரீமியர் லீக் – தகுதி இறக்கத்தை நெருங்குகிறது ஸ்டோக் சிட்டி !

லண்டன், ஏப்.17 –

இங்கிலீஷ் பிரீமியர் லீக் கால்பந்துப் போட்டியில் இருந்து தகுதி இறக்கம் காணும் நிலையை ஸ்டோக் சிட்டி மெல்ல நெருங்கி வருகிறது. திங்கட்கிழமை நடந்த லீக் ஆட்டத்தில் ஸ்டோக் சிட்டி 1 – 1 என்ற கோல்களில் வெஸ்ட் ஹேம் யுனைடெட் அணியுடன் சமநிலைக் கண்டது. இந்த சமநிலை முடிவை அடுத்து ஸ்டோக் சிட்டி 28 புள்ளிகளுடன் பட்டியலில் தொடர்ந்து 19 ஆவது இடத்தில் உள்ளது.

இன்னும் நான்கு லீக் ஆட்டங்களே எஞ்சியுள்ள வேளையில் ஸ்டோக் சிட்டி அனைத்து ஆட்டங்களில் வெற்றி பெற்றால் கூட, பிரீமியர் லீக் போட்டியில் நிலைத்திருக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 16 ஆவது 17 ஆவது இடங்களில் உள்ள சுவான்சி சிட்டி, கிறிஸ்டல் பேலஸ் அணிகளின் முடிவைப் பொறுத்தே ஸ்டோக் சிட்டியின் எதிர்காலம் அமையவிருக்கிறது.

லண்டனில் உள்ள ஒலிம்பிக் அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் முதல் பாதியில் இரண்டு அணிகளும் எந்த ஒரு கோலையும் போடவில்லை.எனினும் 79 ஆவது நிமிடத்தில் பீட்டர் குரோச் போட்ட கோலின் மூலம் ஸ்டோக் சிட்டி 1 – 0 என்ற கோலில் முன்னணிக்கு சென்றது. ஆட்டம் முடிவடையும் தருவாயில் ஆன்டி காரோல் போட்ட கோல் ஸ்டோக் சிட்டியின் வெற்றி கனவை கலைத்தது.

வெஸ்ட் ஹேம் யுனைடெட்டுக்கு எதிராக வெளிப்படுத்திய ஆட்டத்தரத்தை இந்த பருவம் முழுவதும் வெளிப்படுத்தி இருந்தால் ஸ்டோக் சிட்டி இங்கிலீஷ் பிரீமியர் லீக் போட்டியில் நிலைத்திருக்கும் என அதன் நிர்வாகி போல் லம்பேர்ட் தெரிவித்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன