ரூபாய் நோட்டுகள் இல்லாமல் பணப்பட்டுவாட இயந்திரங்கள் மூடப்பட்டுள்ளது; மக்கள் அவதி

0
14

புதுடெல்லி, ஏப் 17-

ஐதராபாத், போபால், வாரணாசி உள்ளிட்ட பல இடங்களில் கடந்த சில நாட்களாக ரூபாய் நோட்டு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின.

அந்த வகையில் தற்போது தமிழ்நாட்டிலும் பல இடங்களில் ரூபாய் நோட்டுகள் இல்லாமல் பணப்பட்டுவாடா இயந்திரங்கள் மூடப்பட்டுள்ளன. இதனால், மக்கள் சிரமத்தை எதிர்நோக்கி வருகின்றனர்.

முக்கிய நகரங்களில் உள்ள வங்கிகளில் குறிப்பிட்ட அளவுக்கு மேல் ரூபாய் நோட்டுகளை அளிக்க அதிகாரிகள் மறுப்பு தெரிவிக்கின்றனர். பட்டுவாடா இயந்திரங்கள் குறித்த எந்தப் புகாரையும் அவர்கள் காதில் வாங்கிக்கொள்ளவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.