அண்மையச் செய்திகள்
முகப்பு > முதன்மைச் செய்திகள் > ஈஸ்வரி கொலை சம்பவம்: சந்தேகத்தின் பேரில் இருவர் கைது
முதன்மைச் செய்திகள்

ஈஸ்வரி கொலை சம்பவம்: சந்தேகத்தின் பேரில் இருவர் கைது

ஈப்போ, ஏப் 17-
ஈப்போ, தாமான் பெர்மையில் கழுத்து இறுக்கி ஈஸ்வரி கொலை செய்யப்பட்டச் சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் இரு நபர்களை போலீஸ் கைது செய்தனர்.
நேற்று பிற்பகல் 1.45 மணியளவில் வீட்டினுள் நுழைந்த இரண்டு கொள்ளையர்கள் வீட்டில் இருந்த ஈஸ்வரியை (வயது 32) நிலோன் வகை கயிற்றால் கழுத்தை இறுக்கி கொலை செய்ததோடு அவர் அணிந்திருந்த சங்கிலி, மூக்குத்தி முதலானவற்றைத் திருடி சென்றனர்.
அவர் அணிந்திருந்த மூக்குத்தி, சங்கிலி ஆகிய நகைகளுக்கு ஆசைப்பட்டு அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இச்சம்பவத்தின்போது ஈஸ்வரின் கணவர் வேலைக்கு சென்றிருந்த நிலையில் அவரது மாமனார் வீட்டின் வேறொரு அறையில் இருந்துள்ளார். அவருக்கு காது கேளாத பிரச்னை இருப்பதால் சம்பவம் பற்றி அவருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை என கூறப்பட்டது.
நேற்று மாலை 4 மணியளவில் ஈஸ்வரியின் உறவினர் வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் பிரதான அறையில் ஈஸ்வரி இறந்து கிடந்தது தெரிய வந்தது.
சம்பவம் நிகழ்ந்த பிறகு ரகசிய காமிராவின் பதிவில் இரு ஆடவர்கள் அந்த வீட்டிலிருந்து வெளியேறியது தெரிய வந்தது. அவர்களை அடையாளம் கண்ட கொண்ட போலீசார் அவ்விருவரையும் குனோங் ரப்பாட்டில் கைது செய்தனர்.
சுமார் 20 முதல் 30 வயதிற்குட்பட்ட அவ்விருவர் மீதும் குற்றவியல் பிரிவு 302இன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து போலீஸ் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன