அண்மையச் செய்திகள்
முகப்பு > சமூகம் > இன்று உங்களது ராசி பலன்
சமூகம்முதன்மைச் செய்திகள்

இன்று உங்களது ராசி பலன்

மேஷம்

இன்று உங்களது புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். உறவினர்கள் உதவி கேட்டு வருவார்கள். தாய்மாமன் மூலம் எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. உங்கள் முயற்சிக்கு வாழ்க்கைத்துணை பக்கபலமாக இருப்பார். அலுவலகத்தில் அதிகாரிகளால் பாராட்டப்படும் சந்தர்ப்பம் ஏற்படும். வியாபாரத்தில் லாபம் கூடுதலாகக் கிடைக்கும்.

 

ரிஷபம்

இன்று உங்களுக்கு அனுகூலமான நாளாக அமையும். உற்சாகமாகக் காணப்படுவீர்கள். புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது. பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். தாயின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றும் வாய்ப்பு சிலருக்கு ஏற்படக்கூடும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரித்தாலும் உற்சாகமாகச் செய்வீர்கள். வியாபாரத்தில் பிற்பகலுக்கு மேல் பணியாளர்களால் பிரச்னை ஏற்படக்கூடும்.

 

மிதுனம்

உங்களது தாய்வழி உறவுகளுக்காக செலவு செய்யவேண்டி இருக்கும். தாய்மாமன் வகையில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். கணவன் – மனைவிக்கிடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும். வாழ்க்கைத்துணையின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். பிற்பகலுக்கு மேல் எதிர்பாராத செலவுகள் ஏற்படக்கூடும். அலுவலகத்தில் உற்சாகமாகச் செயல்படுவீர்கள். வியாபாரத்தில் கூடுதலான லாபம் கிடைக்கும்.

கடகம்

இன்று உங்களது உறவினர்கள் வருகையால் வீட்டில் கலகலப்பான சூழ்நிலை ஏற்படும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. புதிய முயற்சி சாதகமாக முடியும். தாயின் தேவையைப் பூர்த்தி செய்வீர்கள். அலுவலகத்தில் உங்கள் பணிகளில் கூடுதல் கவனம் தேவைப்படும். வியாபாரம் வழக்கம்போலவே இருக்கும்.

 

சிம்மம்

இன்று உங்களுக்கு அதிர்ஷ்டகரமான நாளாக இருக்கும். புதிய முயற்சிகளைத் தொடங்குவது சாதகமாக முடியும். சகோதர வகையில் எதிர்பாராத செலவுகள் ஏற்படக்கூடும். தாய் வழி உறவினர்களால் அனுகூலம் உண்டாகும். உறவினர்களின் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். அலுவலகத்தில் வழக்கமான நிலையே காணப்படும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.

 

கன்னி

இன்று நீங்கள் பொறுமையுடன் செயல்படவேண்டிய நாள். குடும்பத்தில் உள்ளவர்களின் தேவைகளை நிறைவேற்ற பாடுபடவேண்டியிருக்கும். வாழ்க்கைத்துணை உங்கள் பொறுப்புகளைப் பகிர்ந்து கொள்வது ஆறுதலாக இருக்கும். பிள்ளைகள் நீங்கள் சொல்லும் அறிவுரையைக் கேட்டுக் கொள்வார்கள். அலுவலகத்தில் சக பணியாளர்கள் அனுசரணையாக நடந்துகொள்வார்கள். வியாபாரம் எதிர்பார்த்தபடியே நடக்கும்.

 

துலாம்

இன்று நீங்கள் எந்த முடிவையும் ஒருமுறைக்குப் பலமுறை யோசித்து எடுப்பது நல்லது. குடும்பத்தில் மற்றவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பதுடன் அவர்களை அனுசரித்துச் செல்வது அவசியம். கணவன் – மனைவிக்கிடையில் சிறு பிரச்னை ஏற்படக்கூடும் என்பதால் பொறுமை அவசியம். தெய்வ அனுக்கிரகம் பரிபூரணமாகக் கிடைக்கும். அலுவலகப் பணிகளில் கூடுதல் கவனம் தேவை. வியாபாரம் வழக்கம் போல இருக்கும்.

 

விருச்சிகம்

இன்று அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும். புதிய முயற்சிகளில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும். வாழ்க்கைத்துணைவழி உறவுகளால் ஆதாயம் ஏற்படக்கூடும். வாழ்க்கைத் துணையால் மகிழ்ச்சி உண்டாகும். முக்கிய பிரமுகர்களின் அறிமுகமும் அவர்களால் ஆதாயமும் கிடைக்கும். அலுவலகத்தில் வழக்கமான நிலையே காணப்படும். வியாபாரம் எதிர்பார்த்தபடி இருக்கும்.

 

தனுசு

இன்று நீங்கள் எதிர்பாராத நல்ல வாய்ப்புகள் வந்து சேரும் நாள். தொடங்கும் காரியங்கள் சாதகமாக முடியும். சிலருக்கு புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கும் யோகம் ஏற்படக்கூடும். குடும்பம் தொடர்பான முக்கிய முடிவை பிற்பகலுக்கு மேல் எடுக்கலாம். சிலருக்குப் பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்படக்கூடும். அலுவலகத்தில் உங்கள் பணிகளில் கூடுதல் கவனம் தேவைப்படும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.

 

மகரம்

இன்று உங்களுக்கு உற்சாகமான நாளாக அமையும். தொட்ட காரியங்கள் வெற்றிகரமாக முடியும். குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்றுக்கொள்வார்கள். வாழ்க்கைத்துணைவழி உறவுகளால் எதிர்பாராத செலவுகள் ஏற்படக் கூடும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. அலுவலகத்தில் எதிர்பார்த்த சலுகை சற்று இழுபறிக்குப் பிறகு கிடைத்துவிடும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.

 

கும்பம்

இன்று உங்களுக்கு உற்சாகமான நாளாக அமையும். சகோதரர்களால் ஆதாயமும் இருக்கும்; அலைச்சலும் இருக்கும். மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். அவசர முடிவுகளைத் தவிர்க்கவும். பிள்ளைகளின் விருப்பத்தைப் பூர்த்தி செய்வீர்கள். சிலருக்கு திடீர் பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. மாலையில் உறவினர்கள் வருகையால் சிறு சங்கடம் ஏற்படலாம். அலுவலகத்தில் வழக்கமான நிலையே காணப்படும். வியாபாரம் சுமாராகதான் இருக்கும்.

 

மீனம்

இன்று உங்களுக்கு அனுகூலமான நாளாக அமையும். தாயின் விருப்பத்தைப் பூர்த்தி செய்வீர்கள். இளைய சகோதர வகையில் செலவுகள் ஏற்படக்கூடும். பிற்பகலுக்கு மேல் சிலருக்கு எதிர்பாராத பொருள்வரவுக்கு வாய்ப்பு உண்டு. தேவையான பணம் கையில் இருந்தாலும், தேவையற்ற செலவுகளும் ஏற்படக்கூடும். அலுவலகத்தில் கூடுதல் பொறுப்புகளை ஏற்கவேண்டி இருக்கும். வியாபாரத்தில் விற்பனை சுமாராகத்தான் இருக்கும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன