திங்கட்கிழமை, டிசம்பர் 16, 2019
அண்மையச் செய்திகள்
முகப்பு > முதன்மைச் செய்திகள் > துன்னிடம் ஆசி பெற்றார் தங்கராணி !
முதன்மைச் செய்திகள்

துன்னிடம் ஆசி பெற்றார் தங்கராணி !

கோலாலம்பூர், ஏப்.19 –

வரும் 14 ஆவது பொதுத் தேர்தலில் பேரா, சுங்கை சிப்புட் நாடாளுமன்றத் தொகுதியில் ம.இ.கா. சார்பில்  போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படும் தங்கராணி இன்று ம.இ.கா-வின் முன்னாள் தேசிய தலைவர் துன் சாமிவேலுவிடம் ஆசி பெற்றார். கோலாலம்பூரில் உள்ள , இந்தியா மற்றும் தெற்காசிய நாடுகளுக்கான சிறப்பு தூதர் அலுவலகத்தில் தங்கராணி துன் சாமிவேலுவை சந்தித்து ஆசி பெற்றார்.

சுங்கை சிப்புட்டில் சமூக பொருளாதார மேம்பாடு குறித்து தங்கராணி, சாமிவேலுவுடன் விவாதித்தார். 1974 ஆம் ஆண்டுத் தொடங்கி 2008 ஆம் ஆன்டு வரை சுமார் 34 ஆண்டுகள், துன் சாமிவேலு, சுங்கை சிப்புட் நாடாளுமன்ற உறுப்பினராக வலம் வந்தார்.  இம்முறை ம.இ.கா. சார்பில் சுங்கை சிப்புட்டில் போட்டியிடவிருக்கும் தங்கராணிக்கு சாமிவேலு ஆசி வழங்கியதுடன் தமது ஆதரவையும் தெரிவித்தார்.

துன் சாமிவேலு வழங்கிய ஆதரவுக்கு தங்கராணி நன்றி தெரிவித்துக் கொண்டார். வரும் பொதுத் தேர்தலில் மகளிரின் பங்களிப்பை அதிகரிக்கச் செய்யும் வகையில் அதிகமான மகளிர் வேட்பாளர்களுக்கு வாய்ப்பு வழங்க பிரதமர் டத்தோ ஶ்ரீ நஜிப் துன் ரசாக் முடிவு செய்துள்ளார். அதில் ஒரு பகுதியாக ம.இ.கா. சார்பில் நாடாளுமன்றத்தில் போட்டியிட தங்கராணிக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.

இதற்கு முன்னர் டத்தோ சிவராஜ், டத்தோஶ்ரீ எஸ்.கே. தேவமணி, டத்தோ சக்திவேல், டத்தோ சோதிநாதன், டத்தோஶ்ரீ எஸ்.வேள்பாரி என பலர் பெயர் சுங்கை சிப்புட் தொகுதியுடன் இணைத்து பேசப்பட்ட வேளையில் தற்போது புந்தோங்கைச் சேர்ந்த தங்கராணி அங்கே வேட்பாளராக நிறுத்தப்படுவார் என கூறப்படுகிறது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன