ஞாயிற்றுக்கிழமை, பிப்ரவரி 23, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > மற்றவை > அமேசோன் நிறுவனத்தின் செயலியில் புதிய வசதிகள்
மற்றவைமுதன்மைச் செய்திகள்

அமேசோன் நிறுவனத்தின் செயலியில் புதிய வசதிகள்

கோலாலம்பூர், ஏப்.19-

பிரபல இணையத்தள வர்த்தக நிறுவனமான அமேசோன் அதன் வாடிக்கையாளர்களுக்காக ‘அனைத்துலக பொருட்கள் வாங்குதல்’ எனும் திட்டத்தை அதன் செயலியில் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் வழி வாடிக்கையாளர்கள் 4 கோடியே 50 லட்சம் வகையான பொருட்களை வாங்க முடியும். குறிப்பாக, அனைத்துலக வாடிக்கையாளர்களுக்கு அமெரிக்காவிலிருந்து பல தரப்பட்ட பொருட்களை அனுப்பி வைக்க முடியும்.

இந்த செயலியில் வாடிக்கையாளர்களின் வசதிக்காக ஆங்கிலம், ஸ்பெயின், சீனம், ஜெர்மன், பிரேசில் உள்ளிட்ட மொழிகளில் சேவைகளை வழங்குகின்றது. ஐஓஎஸ் மற்றும் என்ட்ரோய்ட் செயலிகள் மூலம் அமேசோன் நிறுவனத்தில் பொருட்களை எளிதாக வாங்க முடியும்.

சுமார் 25 வகை நாணயங்களில் இந்தப் பொருட்களை வாங்க முடியும். அமேசோனில் இதற்கு முன்னர் இருந்த பொருட்கள் வாங்கும் திட்டத்தை காட்டிலும் தற்போதைய திட்டம் பல தனிச்சிறப்புகள் வாய்ந்தது என்று கூறப்படுகிறது. பொருட்களை குறிப்பிட்ட இடத்திற்கு விரைவில் அனுப்பி வைக்கப்படும் சேவையை வாடிக்கையாளர்கள் தேர்வு செய்ய வேண்டும். இத்திட்டம் குறித்து மேல் விவரங்கள் பெறுவதற்கு என்ற www.amazon.com/international-shopping-help. மின்னஞ்சல் முகவரியை அனுகலாம்.

வாடிக்கையாளர்களுக்காக நாங்கள் பல புத்தாக்கத் திட்டங்களை செய்துக் கொண்டிருப்போம். அமெரிக்காவை தவிர்த்து மற்ற நாடுகளிலிருக்கும் வாடிக்கையாளர்களுக்கு இந்தப் புதியத் திட்டம் வாடிக்கையாளர்களுக்கு மிகச் சிறந்த வாய்ப்பாக அமையும் என அமேசோனின் ஏற்றுமதி மற்றும் வளர்ச்சி துணைத் தலைவர் சமிர் குமார் தெரிவித்தார்.

எளிதான முறையில் பொருட்கள் வாங்குவதற்கு வாடிக்கையாளர்கள் நீண்ட நாட்களாக தங்களை அனுகியதாகவும் அவர் குறிப்பிட்டார். வாடிக்கையாளர்களின் விண்ணப்பத்தை கருத்தில் கொண்டே இத்திட்டத்தைக் கொண்டு வந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

முதற்கட்ட நடவடிக்கையாக ஆப்பில் மற்றும் கூகல் பிலே ஸ்தோர் செயலியின் மூலம் அமேசோன் செயலியை பதிவிறக்கம் செய்ய வேண்டும். அந்தப் பதிவிறக்கத்திற்கு பின்னர் பொருட்களை வாங்கும் நடைமுறை வாடிக்கையாளர்களூக்கு இயல்பாகவே தெரிய வரும் என்று அவர் கூறினார்.

எனவே, பெரும்பாலும் ஆன்லைன் மூலம் பொருட்களை வாங்கும் வாடிக்கையாளர்கள் அமெசோன் அமல்படுத்தியிருக்கும் இத்திட்டத்தை பயன்படுத்தி ஆதரவும் ஒத்துழைப்பும் வழங்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன