பொக்கா கைதிகளுக்கு பாகான் டத்தோக்கில் புதிய சிறை

0
5

பாகான் டத்தோக், ஏப்.19-
குற்றச் செயல் தடுப்பு சட்டத்தின் (பொக்கா) கீழ் தடுத்து வைக்கப்படும் கைதிகளுக்காக பாகான் டத்தோக்கில் சிறப்பு சிறை கட்டப்படும் என துணைப்பிரதமரும் உள்துறை அமைச்சருமான டத்தோஶ்ரீ ஸாஹிட் ஹாமீடி தெரிவித்தார்.

இந்த புதிய சிறையைக் கட்டுவதற்கு அமைச்சரவை அனுமதி அளித்திருப்பதாக அவர் கூறினார். தற்போது பொக்கா சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்படுபவர்கள் ஜொகூர், சிப்பாங் ரெங்காமில் வைக்கப்படுகின்றனர். அதனால், பொக்கா கீழ் தடுத்து வைக்கப்படுபவர்களுக்காக பாகான் டத்தோக்கில் புதிய சிறையைக் கட்டுவதற்கு முடிவெடுக்கப்பட்டுள்ளது.

உள்துறை அமைச்சராக நான் பதவியேற்றதிலிருந்து குற்றச்செயல்கள் 53 விழுக்காடாக குறைந்துள்ளது. அதனால், குற்றச்செயல்களின் விகிதம் மேலும் குறையும் வகையில் இந்த புதிய சிறையை நான் கட்ட விரும்புவதாக தெலுக் பூலோவில் மாவட்ட வாக்களிப்பு மையத்தை பார்வையிட்ட பிறகு உரையாற்றிய போது ஸாஹிட் ஹாமீடி கூறினார்.

அண்மையில் வெளியிடப்பட்ட தேசிய முன்னணியின் தேர்தல் அறிக்கையில் பொக்கா சட்டம் மற்றும் வன்முறை துடைத்தொழிப்பு சட்டம் (போட்டா) ஆகியவற்றின் கீழ் தடுத்து வைக்கப்படும் சுமார் ஆயிரம் பேரை வைப்பதற்காக சிறப்பு சிறை அமைக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டுள்ளது.