கோலாலம்பூர், ஏப். 19-
நம்பிக்கைக் கூட்டணி (பக்காத்தான் ஹராப்பான்) தலைமையிலான அரசாங்கத்திற்கே ஆதரவளிக்க வேண்டும் எனும் நிலைப்பாட்டில் பி.எஸ்.எம். கட்சி உறுதியாக உள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஏ.சிவராஜன் தெரிவித்தார்.

14ஆவது பொதுத்தேர்தலுக்கு பின்னர் சிலாங்கூரில் சட்டமன்றத்தைச் சார்ந்துள்ள தொங்கு அரசாங்கம் உருவானால் பி.எஸ்.எம். ஆட்சியை நிர்ணயிக்ககூடியதாக விளங்கும் என அவர் சொன்னார்.

இதற்கு முன்னர் பி.எஸ்.எம். 4 நாடாளுமன்ற தொகுதிகளிலும் 12 சட்டமன்ற தொகுதிகளிலும் தனது கட்சியின் சார்பில் வேட்பாளர்களை நிறுத்த விருப்பதை உறுதி செய்தது. இதில், சிலாங்கூரில் 56 தொகுதிகளில் செமினி, கோத்தா டாமன்சாரா, கோத்தா கெமுனிங் (இதற்கு முன்னர் ஶ்ரீ மூடா), போர்ட் கிள்ளான் ஆகிய தொகுதிகள் அடங்கும்.

ஹராப்பானுடனான தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை தோல்வி கண்ட போதிலும் பி.எஸ்.எம். கட்சியின் மத்திய செயலவை உறுப்பினர் எஸ்.அருட்செல்வன் கூறுகையில், அக்கட்சி ஒரு போதும் தேசிய முன்னணியை ஆதரிக்காது என கூறினார்.