திங்கட்கிழமை, ஏப்ரல் 6, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > மற்றவை > கேவியஸ் மறுத்த சிகாம்புட் தொகுதியில் லோக பாலமோகன் போட்டி! தெங்கு அட்னான் அறிவிப்பு
மற்றவைமுதன்மைச் செய்திகள்

கேவியஸ் மறுத்த சிகாம்புட் தொகுதியில் லோக பாலமோகன் போட்டி! தெங்கு அட்னான் அறிவிப்பு

கோலாலம்பூர், ஏப். 22-
வருகின்ற 14ஆவது பொதுத்தேர்தலில் நாடாளுமன்றங்கள் மற்றும் சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிடவிருக்கும் வேட்பாளர்களின் பெயர்களை தேசிய முன்னணி, நம்பிக்கைக் கூட்டணி, பாஸ், பி.எஸ்.எம். முதலான கட்சிகள் அறிவித்து வருகின்றன.

இந்நிலையில், கூட்டரசு பிரதேசத்தில் நாடாளுமன்ற தொகுதிகளில் தேசிய முன்னணியின் சார்பில் போட்டியிடவிருக்கும் வேட்பாளர்களின் பெயர்களை கூட்டரசுப் பிரதேச தேசிய முன்னணியின் தலைவர் டத்தோஸ்ரீ தெங்கு அட்னான் இன்று வெளியிட்டார்.

இதில், மைபிபிபி கட்சியின் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எம்.கேவியஸுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டு அவர் மறுத்த சிகாம்புட் நாடாளுமன்ற தொகுதியில் அவரது கட்சியின் சார்பில் செனட்டர் டத்தோ லோக பாலமோகன் போட்டியிடவிருக்கிறார். டத்தோ லோக பாலமோகன் கூட்டரசு பிரதேச துணையமைச்சர் என்பது குறிபிடத்தக்கது.

கெப்போங் தொகுதியில் ஓங் சியாங் லியாங் (கெராக்கான்), பத்து தொகுதியில் டொமினிக் லாவ் (கெராக்கான்), வங்சா மாஜுவில் டத்தோஸ்ரீ யியோ தியோங் லோக் (ம.சீ.ச), செத்தியாவங்சாவில் டான்ஸ்ரீ சூல்ஹாஸ்னான் ரஃபிக் (அம்னோ), தித்திவங்சாவில் டத்தோஸ்ரீ ஜொஹாரி அப்துல் கனி (அம்னோ), புக்கிட் பிந்தாங்கில் டான் என் என் (ம.சீ.ச), லெம்பா பந்தாயில் டத்தோஸ்ரீ ராஜா நோங் சிக் (அம்னோ), செப்பூத்தேவில் சான் குயின் எர் (ம.சீ.ச), செராஸில் ஹெங் சின் யீ (ம.சீ.ச), பண்டார் துன் ரசாக்கில் அட்னான் அப்துல் செமான் (அம்னோ), புத்ராஜெயாவில் டத்தோஸ்ரீ தெங்கு அட்னான் தெங்கு மன்சோர் (அம்னோ), லாபுவானில் டத்தோ ரோஸ்மான் இஸ்லி (அம்னோ) ஆகியோர் போட்டியிடவுள்ளனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன