அண்மையச் செய்திகள்
முகப்பு > விளையாட்டு > சிறந்த ஆட்டக்காரர் விருதை வென்றார் சாலா!
விளையாட்டு

சிறந்த ஆட்டக்காரர் விருதை வென்றார் சாலா!

லண்டன், ஏப்.23 –

இங்கிலாந்து தொழில்முறை கால்பந்து ஆட்டக்காரர்கள் சங்கத்தின் சிறந்த ஆட்டக்காரர் விருதை லிவர்பூலின் முஹமட் சாலா வென்றுள்ளார். இந்த விருதைப் பெறும் முதல் எகிப்து ஆட்டக்காரராகவும் சாலா விளங்குகிறார். இந்த பருவத்தில் லிவர்பூல் கிளப்புக்கு 41 கோல்களைப் போட்டு அதிரடி படைத்திருக்கும் சாலாவின் சிறந்த ஆட்டத்தரத்தினால் அவருக்கு அந்த விருது வழங்கப்படுகிறது.

அதேவேளையில் லிவர்பூல், ஐரோப்பிய வெற்றியாளர் லீக் கிண்ண கால்பந்துப் போட்டியின் அரையிறுதி ஆட்டத்துக்குத் தேர்வு பெறவும் சாலா முக்கிய காரணமாக அமைந்துள்ளார். இந்த விருதுக்கு முன் மொழியப்பட்ட இதர ஐந்து ஆட்டக்காரர்களைப் பின்னுக்குத் தள்ளி சாலா விருதை வென்றார்.

மென்செஸ்டர் சிட்டியின் கேவின் டி புரூன், டாவிட் சில்வா, லெரோய் சானே, ஹாரி கேன் ஆகியோரும் இந்த விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டிருந்தனர். சிறந்த இளம் ஆட்டக்காரருக்கான விருது லெரோய் சானேவுக்கு வழங்கப்பட்டது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன