ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 17, 2019
அண்மையச் செய்திகள்
முகப்பு > மற்றவை > அம்னோவைக் கலைக்க தொடுத்த வழக்கில் 26ஆம் தேதி செவிமடுப்பு!
மற்றவைமுதன்மைச் செய்திகள்

அம்னோவைக் கலைக்க தொடுத்த வழக்கில் 26ஆம் தேதி செவிமடுப்பு!

கோலாலம்பூர், ஏப். 23-
அம்னோவின் அனைத்து பிரிவு தேர்தல்களையும் தள்ளி வைப்பதற்கு தேசிய சங்கப் பதிவிலாகா (ஆர்.ஓ.எஸ்) அக்கட்சிக்கு வழங்கிய அனுமதியை எதிர்த்து கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் சீராய்வு மனுவைத் தாக்கல் செய்த அக்கட்சியைச் சேர்ந்த 16 பேரின் வழக்கின் செவிமடுப்புக்கான தேதி வருகின்ற வியாழக்கிழமை 26ஆம் தேதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கின் செவிமடுப்பு நீதிபதி டத்தோ வீரா கமாலுடின் முஹம்மட் சைட் முன்னிலையில் நடைபெறவுள்ளது.

இது குறித்து வழக்கறிஞர் முஹம்மட் ஹனிஃப் கத்ரி அப்துல்லா கூறுகையில், எங்கள் தரப்பு உடனடியாக ஒப்புதல் கடிதத்தை இன்னும் வழங்காத நிலையில் இவ்வழக்கின் செவிமடுப்பிற்கான தேதி முன்கூட்டியே நிர்ணயிக்கப்பட்டுள்ளது எங்களுக்கு ஆச்சர்யமளிப்பதாக அவர் தெரிவித்தார்.

14ஆவது பொதுத்தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் வருகின்ற சனிக்கிழமையும் வாக்களிக்கும் நாள் மே 9ஆம் தேதியிலும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை அம்னோ செரி மெர்ப்பாத்தி பண்டான் இண்டா கிளையின் தலைவர் சாலிஹுடின் அஹ்மாட் காலிட் தலைமையில் சுமார் 16 உறுப்பினர்கள் அம்னோவின் கட்சித் தேர்தலை நடத்துவதற்கு அடுத்தாண்டு ஏப்ரல் 19ஆம் தேதி வரையில் காலக்கெடுவை ஆர்.ஓ.எஸ். வழங்கியிருப்பதை எதிர்த்து கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் சீராய்வு மனுவைத் தாக்கல் செய்தனர்.

அதன் மறுநாளே, அம்னோவின் பொதுச்செயலாலர் டத்தோஸ்ரீ தெங்கு அட்னான் அந்த 16 பேரும் கட்சியின் 20.7 சட்டப்பிரிவை மீறி நீதிமன்றத்திற்கு சென்றதால் அவர்கள் இயல்பாகவே உறுப்பினர்கள் எனும் தகுதியை இழப்பதாக தெரிவித்தார். அவர்களின் நீக்கம் குறித்து ஹனிஃப் கூறுகையில் அவர்கள் அனைவரும் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கை அம்னோ மீது தொடுக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன