செவ்வாய்க்கிழமை, நவம்பர் 19, 2019
அண்மையச் செய்திகள்
முகப்பு > சமூகம் > பினாங்கு மாநிலத்திலுள்ள அனைத்து தமிழ்ப்பள்ளிகளும் பங்கேற்ற தகவல் தொடர்பு தொழில்நுட்பப் போட்டி!
சமூகம்மற்றவை

பினாங்கு மாநிலத்திலுள்ள அனைத்து தமிழ்ப்பள்ளிகளும் பங்கேற்ற தகவல் தொடர்பு தொழில்நுட்பப் போட்டி!

ஜோர்ஜ்டவுன், ஏப். 23-

தமிழ்ப்பள்ளி மாணவர்கள் தகவல் தொடர்பு தொழில்நுட்பத் திறனறிவில் சிறந்த நிலையில் உருவாக்கும் முயற்சியில் தித்தியான் டிஜிட்டல் எனும் திட்டத்தை கோலக்கிள்ளான் இந்து இளைஞர் இயக்கம் மற்றும் மலேசிய சமூக கல்வி அறவாரியமும் 2009 ஆண்டு தொடங்கி வெற்றிநடை போட்டு வருகின்றனர்.

இத்திட்டத்தில் வழி மாணவர்களின் தகவல் தொடர்பு தொழில்நுட்பத் திறனறிவை மேலும் மேலோங்கச் செய்யவும், புறநகர், நகர்புற மாணவர்களிடையே அமையப்பெற்ற தகவல் தொடர்பு திறனறிவை (ICT) இடைவெளியை குறைக்க இத்திட்டம் பெரும் பங்காற்றி வருகின்றது. அதை தொடர்ந்து, மலேசியாவில் உள்ள அனைத்து தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்காகவும் கடந்த 4 வருடங்களாக தேசிய நிலையிலான தகவல் தொடர்பு தொழில்நுட்பப் போட்டியை வழிநடத்தி வருகின்றனர். இப்போட்டியின்வழி மாணவர்களின் படைபாற்றல் திறனையும், உறுவாக்கத் திறனையும், தகவல் தொடர்பு தொழில்நுட்ப திறனையும் மேலோங்கச் செய்ய வழிவகுக்கின்றது. இதில் 5 போட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன, அதில் தகவல் தொடர்பு தொழில்நுட்பப் புதிர்ப்போட்டி மட்டுமே மாநில அளவில் நடைபெற்று வருகிறது.

இவ்வாண்டு பினாங்கு மாநில நிலையிலான புதிர்ப்போட்டியில் பினாங்கிலுள்ள அனைத்து தமிழ்ப்பள்ளியும் கலந்துக் கொண்டது சிறப்புக்குறியது. நான்காவது வருடமாக நடத்தப்படும் இப்போட்டியில் முதல் முறையாக ஒரு மாநிலத்தில் சேர்ந்த அனைத்து தமிழ்ப்பள்ளிகளும் கலந்துக் கொண்டது இதுவே முதன்முறை. இம்மாநிலம் போலவே மற்ற அனைத்து மாநிலங்களிலுள்ள தமிழ்ப்பள்ளிகளும் இப்போட்டிகளில் கலந்து சிறப்பிக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறோம். இப்போட்டிற்கு மைநாடி அறவாரியமும், இத்திட்டத்திற்கு பிரதமர்துறையின் கீழ் செயல்படும் செடிக்  அமைப்பும் (SEDIC) பேருதவிப் புரிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

பினாங்கு மாநில அளவிலான தகவல் தொடர்பு தொழில்நுட்பப் புதிர்ப் போட்டி, அண்மையில் பினாங்கிலுள்ள டிஸ்டெட் கல்லூரியில் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் பினாங்கு, பாயான் லெப்பாஸ் தொகுதியின் மலேசிய கல்வி, சமூக ஆய்வு அறவாரியத்தின் (EWRF) துணைத்தலைவர் உயர்திரு பன்னிர்செல்வம் சுப்பரமணியம் அவர்கள் சிறப்பு பிரமுகராக கலந்துக் கொண்டு, மாணவர்களுக்கு பரிசுகளை எடுத்து வழங்கினார்.

அவர் தம் உரையில், இவ்வகையான போட்டிகளில் அதிகமான தமிழ்ப்பள்ளிகள் கலந்துக் கொண்டு மேன்மேலும் நன்மை அடைய வேண்டுமென கேட்டுக்கொண்டார். பினாங்கு மாநிலத்தில் மட்டும் தான் அனைத்து தமிழ்ப்பள்ளி மாணர்களும் கலந்துக் கொண்டு இந்நிகழ்வை மேன்மேலும் சிறப்பு செய்தனர். அனைத்து தமிழ்ப்பள்ளிகளுக்கும் தனது நன்றியை தேரிவித்துக் கொண்டார்.

மேலும் தகவல் தொடர்பு தொழில்நுட்பத்தின் அவசியத்தையும், காலத்தின் கட்டாயத்தையும் விவரித்துக் கூறினார். தொடர்ந்து சிறந்ததொரு பணியைச் செய்து வரும் கோலக்கிள்ளான் இந்து இளைஞர் இயக்கத்திற்கும், தித்தியான் டிஜிட்டல் திட்டத்திற்கும் தனது நன்றியையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொண்டார். மேலும் எதிர்காலத்தில் தொழில்துறையில் தொழிநுட்பத்தை மேம்படுத்த வேண்டும் என்றார்.

பினாங்கு மாநில அளவிலான தகவல் தொடர்பு தொழில் நுட்பப் புதிர்ப் போட்டியில் வெற்றிப் பெற்று தேசிய நிலைக்கு தேர்வாகியுள்ள பள்ளிகள்:

1. ஹிரோஷன் மகேஸ்வரன், ஆசாட் தமிழ்ப்பள்ளி
2.விக்கினேஸ்வரன் சந்திரன், தாசேக் பெர்மாய் தமிழ்ப்பள்ளி
3. வசந்த் கணேசா, பெர்மாத்தாங் திங்கி தமிழ்ப்பள்ளி
4.ரேஷ்மன் மதிவாணன், பெர்மாத்தாங் திங்கி தமிழ்ப்பள்ளி
5. ரிஷி உதயகுமார், பெர்மாத்தாங் திங்கி தமிழ்ப்பள்ளி
6. மாலினி சந்திரன், தாசேக் பெர்மாய் தமிழ்ப்பள்ளி
7. துபேரன் குணாளன், புக்கிட் மெர்த்தாஜாம் தமிழ்ப்பள்ளி
8. ஜோயெல் செபாஸ் ராஜ் ஹரிஸ் செல்வகுமார், லாடாங் வால்டோர் தமிழ்ப்பள்ளி
9.தர்ஷனா தீபாகரன், லாடா கிரியான் தமிழ்ப்பள்ளி
10. தமிழ் முகிலன் தமிழ்செல்வன், நிபோங் தெபால் தமிழ்ப்பள்ளி
11. நிர்மலன் சுப்ரமணியம், புக்கிட் மெர்த்தாஜாம் தமிழ்ப்பள்ளி
12. ஹரிஸ் ராஜ் ஷங்கர், லாடாங் பிராய் தமிழ்ப்பள்ளி
13. நந்திகா சுப்ரமணியம், பெர்மாத்தாங் திங்கி தமிழ்ப்பள்ளி
14. சஞ்சீவன் வி.எல்.கணேசன், மாக் மண்டின் தமிழ்ப்பள்ளி
15. கிஷாலினி கார்த்திகேசன், பத்து காவான் தமிழ்ப்பள்ளி

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன