பிகேஆர் சின்னத்திலேயே போட்டியிடுவோம் -டான்ஸ்ரீ முகைதீன்

பெட்டாலிங் ஜெயா, ஏப்.23-

பார்ட்டி பிரிபூமி பெர்சத்து மலேசியா (பிபிபிஎம்) கட்சியின் பதிவை தற்காலிகமாக ரத்து செய்யும் சங்கப் பதிவகங்களின் (ஆர்ஓஎஸ்) உத்தரவை இங்குள்ள நீதிமன்றம் ரத்து செய்தது. இதனை அக்கட்சியின் தலைவர் டான்ஸ்ரீ முகைதீன் யாசின் இங்குள்ள அக்கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் அறிவித்தார்.

அதே வேளையில், வரும் பொதுத் தேர்தலில் பிரிபூமி பிகேஆர் சின்னத்தில் தாங்கள் போட்டியிடுவது உறுதி என்றும் முகைதீன் கூறினார். இதன் பொருட்டு பிரிபூமி பெர்சத்து கட்சி 14ஆவது பொதுத் தேர்தலை நோக்கி சுதந்திரமாக நடை போடலாம் என்றார் அவர்.

பிரிபூமி கட்சியின் சீராய்வு மனு மீது சட்டத் துறை தலைவர் செய்த ஆட்சேபம் நிராகரிக்கப்பட்டதாக எனது வழக்கறிஞர் என்னிடம் தெரிவித்தார்” என்றார் முகைதீன். அதே வேளையில், பிரிபூமி கட்சியின் பதிவை தற்காலிகமாக ரத்து செய்யும் சங்கப் பதிவககத்தின் உத்தரவையும் நீதிமன்றம் ரத்து செய்தது” என்று அவர் மேலும் சொன்னார்.

கட்சியின் சட்டவிதிகளுக்கு ஏற்ற உத்தரவை பிரிபூமி பிறப்பிக்கவில்லை என்று இதற்கு முன்பு ஆர்ஓஎஸ் விடுத்த சவால்களை இக்கட்சி இதன் வழி முறியடித்திருப்பதாகவும் கூறப்படுகிறது. பார்ட்டி பிரிபூமி கட்சிக்கு எதிராக தவறு இழைத்திருக்கும் சங்க பதிவகம் மீதான சவால்களை இக்கட்சி இதன் வழி தொடரலாம்” என்று முகைதீன் மேலும் சொன்னார்.

வரும் பொதுத் தேர்தலில் பிரிபூமி கட்சி பிகேஆர் சின்னத்திலேயே போட்டியிடும் என்று அவர் வலியுறுத்தினார்.
1966 ஆம் ஆண்டு சங்க பதிவக பிரிவு 14 (2) தொடர்பான இக்கட்சியின் சீராய்வு கடந்த ஏப்ரல் 13ஆம் தேதி தள்ளுபடி செய்யப்பட்டது. இம்முறை இதே சட்டம் பிரிவு 14(5) இக்கட்சியின் பதிவு 30 நாட்களுக்கு தற்காலிகமாக ரத்து செய்வது மீதான சீராய்வு மனு தொடர்புடையதாகும்.