கோலாலம்பூர், ஏப். 28-
எதிர்வரும் பொதுத் தேர்தலில் பகாங், கேமரன் மலை நாடாளுமன்ற தொகுதியில் ம.இ.கா. இளைஞர் பிரிவின் தேசிய தலைவர் டத்தோ சிவராஜ், பிகேஆர் கட்சியின் சார்பில் மனோகரன் மாரிமுத்து, பாஸ் கட்சியின் சார்பில் வான் மகாதீர் வான் மாமுட், பெர்ஜாசா கட்சி சார்பில் முகமட் தாஹிர் காசிம், பிஎஸ்எம் கட்சி சார்பில் பி.சுரேஸ் குமார் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

இந்த தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடக்கூடும் என எதிர்பார்க்கப்பட்ட மைபிபிபி கட்சியின் முன்னாள் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எம்.கேவியஸ் அத்தொகுதியில் போட்டியிடவில்லை.