வெள்ளிக்கிழமை, பிப்ரவரி 28, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > இந்தியா/ ஈழம் > கருணாநிதியுடன் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் சந்திப்பு
இந்தியா/ ஈழம்

கருணாநிதியுடன் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் சந்திப்பு

சென்னை:
காங்கிரஸ், பாஜக அல்லாத மூன்றாவது அணியை உருவாக்கும் முயற்சியில் தெலுங்கான முதல்வர் சந்திரசேகர் ராவ் ஈடுபட்டு வருகிறார். முதற்கட்டமாக மேற்கு வங்காள முதல்வர் மம்தா பாணர்ஜியை சந்தித்து இது தொடர்பாக அவர் கலந்து ஆலோசித்தார்.

இந்நிலையில், இதே விவகாரம் தொடர்பாக திமுக செயல்தலைவர் முக ஸ்டாலினிடம் ஆலோசனை நடத்துவதற்கான சந்திரசேகர் ராவ் இன்று சென்னை வருகை தந்தார். விமான நிலையத்தில் இருந்து நேராக கோபாலபுரம் சென்ற அவர் அங்கு திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்து உடல்நலம் விசாரித்தார்.

இதனை அடுத்து, சந்திரசேகர் ராவ் ஸ்டாலின் உடன் ஆலோசனை நடத்துகிறார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன