ஞாயிற்றுக்கிழமை, மார்ச் 29, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > பொதுத் தேர்தல் 14 > யொங் பேங்கில் நம்பிக்கை கூட்டணியின் பதாகையில் மகாதீர் படம் அகற்றம்!
பொதுத் தேர்தல் 14முதன்மைச் செய்திகள்

யொங் பேங்கில் நம்பிக்கை கூட்டணியின் பதாகையில் மகாதீர் படம் அகற்றம்!

யொங் பேங், ஏப். 30-

இங்குள்ள தாமான் உத்தாமா யொங் பேங்கில் வைக்கப்பட்டிருந்த நம்பிக்கைக் கூட்டணியின் பதாகையில் இருந்த துன் மகாதீரின் படத்தை தேர்தல் ஆணையம் அகற்றியது.

இது குறித்து ஜொகூர் ஜ.செ.க. தலைவர் லியூ சின் தோங் கூறுகையில், துன் மகாதீரின் படத்தை அகற்ற வேண்டுமென்றால் முதலில் யோசிக்க வேண்டும் என கூறியிருக்கிறேன். ஏன் மகாதீர் படம் பல இடங்களில் இருக்கக்கூடாது? அவர்தான் நம்பிக்கைக் கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் என அவர் தெரிவித்தார்.

நாங்கள் துன் மகாதீரின் படத்தை வைக்க விரும்புகிறோம். ஏன் முடியாது? தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள அடிப்படை விதிமுறைகளுக்கு நானும் நம்பிக்கைக் கூட்டணியும் ஒப்புக்கொள்ளவில்லை. அந்த விதிமுறையில் அடிப்படை சட்டம் இல்லை என நாங்கள் கருதுகின்றோம் என லியூ குறிப்பிட்டார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன