வியாழக்கிழமை, பிப்ரவரி 27, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > முதன்மைச் செய்திகள் > மகாதீரின் தாத்தாதான் கேரளாவிலிருந்து வந்தவர்,  தந்தை அல்ல
முதன்மைச் செய்திகள்

மகாதீரின் தாத்தாதான் கேரளாவிலிருந்து வந்தவர்,  தந்தை அல்ல

கோலாலம்பூர், ஆக. 1 –

பொதுத்  தேர்தல்   நெருங்க வரும் வேளையில், அரசியல்வாதிகள் மற்றவர்களின்  குடும்பப்  பூர்வீகத்தை  எல்லாம்  அம்பலப்படுத்தத்   தொடங்கி   விட்டனர்.

பார்டி   பிரிபூமி   பெர்சத்து   மலேசியா (பெர்சத்து)   அவைத்   தலைவர்  துன் டாக்டர்  மகாதீர்  முகமட்   இந்திய   வம்சாவளியினர்   என   துணைப்   பிரதமர்   டத்தோஸ்ரீ அகமட்  ஜாஹிட்  ஹமிடி நேற்று முன்தினம்,   அம்னோ பேராளர் கூட்டத்தில் கூறியிருந்தார்.

அதற்கு   ஆதாரமாக   அவரது   அடையாள   அட்டையில்   Mahathir a/l Iskandar Kutty  (மகாதீர் த/பெ இஸ்கண்டார் குட்டி) என்றிருப்பதாகவும்  அவர் சுட்டிக் காட்டினார். இதை  மறுத்த   மகாதீரின்   புதல்வர்   டத்தோஸ்ரீ முக்ரிஸ் மகாதீரின் ஆதரவாளர்  மன்றம்,  இந்தியாவின்   கேரளாவிலிருந்து   வந்தவர்   மகாதீரின்   தாத்தா என்றும்   தந்தை   அல்லவென்றும்     முகநூலில்   விளக்கமளித்திருந்தது.

இஸ்கண்டார்  ஜோகூரைச்   சேர்ந்த   சித்தி   ஹாவை   மணந்தார்.  அவர்களுக்கு   முகமட்(மகாதீரின்  தந்தை)  1881-இல்   பிறந்தார்.  முகமட்    வான்  தெம்பாவான்  பிந்தி    வான்   ஹனாவியை   மணந்தார்.   அவர்களுக்குப்  பிறந்தவர்தான்  துன் மகாதீரென குறிப்பிட்டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன