சிகாம்புட் மக்களுக்காக டத்தோ லோகாவின் 6 வாக்குறுதிகள்..!

0
2
சிகாம்புட், மே. 3-
14ஆவது பொதுத் தேர்தலில் சிகாம்புட் நாடாளுமன்றத் தொகுதியில் தேசிய முன்னணி சார்பில் போட்டியிடும் டத்தோ லோகபால மோகன் தொடர்ந்து பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.  கடந்த பொதுத் தேர்தல்களை காட்டிலும் இம்முறை கடுமையான போட்டி நிலவினாலும் மக்களின் ஆதரவில் தம்மால் வெற்றி பெற முடியுமென அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
கடந்த பொதுத் தேர்தல்களில் சிகாம்புட் நாடாளுமன்றத் தொகுதியில் கெராக்கான் கட்சி போட்டியிட்டது. இம்முறை அத்தொகுதியில் மைபிபிபி கட்சியின் சார்பில் தேசிய முனனணி சின்னத்தில் டத்தோ லோகபால மோகன் போட்டியிடுகின்றார்.
அது குறித்து, அநேகன் மேற்கொண்ட ஒரு நேர்காணல் இது.

2008ஆம் ஆண்டு இத்தொகுதியில் கெராக்கான் சார்பில் மா ஹோ சீ போட்டியிட்டார். அவரை எதிர்த்து ஜசெக சார்பில் லிம் இப் எங் களமிறங்கினார். கெராக்கானுக்கு 17,314 வாக்குகள் கிடைத்த வேளையில் ஜசெகவிற்கு 25,046 வாக்குகள் கிடைத்தன. 7,732 வாக்குகள் வித்தியாசத்தில் இத்தொகுதியை ஜசெக வென்றது.
2013ஆம் ஆண்டு நடப்பு நாடாளுமன்ற உறுப்பினரான லிம்மை எதிர்த்து கெராக்கான் சார்பில் ஜெயந்தி போட்டியிட்டார். ஜெயந்திக்கு 22,184 வாக்குகள் கிடைத்த நிலையில் லிம்மிற்கு 41,383 வாக்குகள் கிடைத்தன. 19,199 வாக்குகள் வித்தியாசத்தில் மீண்டும் ஜசெக இத்தொகுதியை தக்கவைத்துக் கொண்டது.
இம்முறை ஜசெக சார்பில் ஹானா யூ போட்டியிடுகிறார். கூட்டரசு பிரதேச துணையமைச்சராக இருந்த டத்தோ லோகபால மோகன் இத்தொகுதியில் களமிறங்கியுள்ளதால் கடுமையான போட்டி நிலவுமென எதிர்பார்க்கப்படுகின்றது.
அவருக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில், அப்பகுதியின் மைபிபிபி, மஇகா, மசீச, கெராக்கான் மற்றும் சமுதாய தலைவர்கள் டத்தோ லோகவுடன் கைகோர்த்து உள்ளனர். அங்குள்ள மக்களின் குறை, நிறைகளை கேட்டு வரும் இவர், அவர்களின் நலனுக்காக ஆறு திட்டங்களை தமது கொள்கை அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார்.