வியாழக்கிழமை, பிப்ரவரி 27, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > பொதுத் தேர்தல் 14 > கெடா, பேராக் மாநிலங்களை தே.மு. பறி கொடுக்கும்! துன் டாய்ம் ஆருடம்
பொதுத் தேர்தல் 14முதன்மைச் செய்திகள்

கெடா, பேராக் மாநிலங்களை தே.மு. பறி கொடுக்கும்! துன் டாய்ம் ஆருடம்

கோலாலம்பூர், மே 3-
முன்னாள் நிதித்துறை அமைச்சரான துன் டாய்ம் ஜைனுடின் வருகின்ற ஆம் தேதி நடைபெறவிருக்கும் நாட்டின் 14ஆவது பொதுத்தேர்தலில் தேசிய முன்னணி கெடா, பேராக் ஆகிய மாநிலங்களை பறி கொடுக்கும் என ஆருடம் தெரிவித்தார்.

நன்யாங் சியாங் பாவ் சீன நாளிதழுக்கு அளித்த நேர்க்காணலில், நம்பிக்கைக் கூட்டணி அவ்விரு மாநிலங்களுக்குமான மந்திரி பெசார் வேட்பாளர்களை தெரிவிப்பது உள்பட குறிப்பிட்ட விதிமுறைகளை பூர்த்தி செய்தால் இது நிச்சயம் நடக்கும் என அவர் கூறினார்.

துன் மகாதீர் முகமட், டத்தோஸ்ரீ முக்ரிஸ் மகாதீர் ஆகியோருடன் நம்பிக்கைக் கூட்டணி சரியாக பிரச்சாரங்களை மேற்கொண்டால் தேசிய முன்னணி ஆட்சியை இழக்கும். அதேவேளையில், ஜொகூர் மற்றும் சபாவில் தேசிய முன்னணிக்கு வாய்ப்பு 50-50 என சரிசமமாக இருப்பதாக டாய்ம் சொன்னார்.

சபா பல முறை அரசாங்கத்தை மாற்றியுள்ளது நினைவிருக்கின்றதா? இறுதியாக துன் முஸ்தாபா ஹருணின் உஸ்னோ அரசாங்கம் அதன் பின்னர் துன் ஹாரிஸ் சாலேவின் பெர்ஜாயா அரசாங்கம் என மாறியுள்ளது. ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கும் அவர்கள் அரசாங்கத்தை மாற்றியே வந்துள்ளனர் என அவர் குறிப்பிட்டார்.

இப்பொழுது சபாவில் மாற்றத்திற்கான எண்ணம் ஏற்பட்டுள்ளதாக நான் நினைக்கின்றேன். 2007ஆம் ஆண்டு இறுதி முதல் துன் டாய்ம் தேசிய முன்னணி குறித்து வெளியிட்ட ஆருடங்கள் உண்மையாகியுள்ளது. 12ஆவது பொதுத்தேர்தலில் கெடா, சிலாங்கூர், கிளந்தான், பினாங்கு ஆகியவற்றை தேசிய முன்னணி இழக்குமென அவர் கூறியிருந்தார். 13ஆவது பொதுத்தேர்தலில் கெடாவை தேசிய முன்னணி மீண்டும் கைப்பற்றும் என டாய்ம் கூறியதைப் போன்று தேசிய முன்னணி அம்மாநிலத்தைக் கைப்பற்றி முக்ரிஸ் மகாதீர் மந்திரி பெசாராக நியமிக்கப்பட்டார். ஆயினும், மூன்று ஆண்டுகளுக்கு பின்னர் அவர் அப்பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.

இம்முறை, தேசிய முன்னணி சிலாங்கூரையும் பினாங்கையும் கைப்பற்றுவதற்கான வாய்ப்பு இருப்பதாக தாம் கருதவில்லை என டாய்ம் தெரிவித்துள்ளார். நெகிரி செம்பிலானில் நம்பிக்கைக் கூட்டணி ஏற்புடைய மந்திரி பெசார் வேட்பாளரை கொண்டிருந்தால் அம்மாநிலத்தைக் கைப்பற்ற முடியுமென கூறினார். அம்னோவின் கோட்டையாக திகழும் மலாக்காவில் அக்கூட்டணி வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு குறைவாக இருப்பதாகவும் பலம் வாய்ந்த வேட்பாளர்கள் இருந்தால் மட்டுமே அக்கூட்டணி வெற்றி பெற முடியுமென டாய்ம் குறிப்பிட்டார்.

புத்ராஜெயாவை யார் கைப்பற்றுவார்கள் என்ற கேள்விக்கு பதிலளிக்கையில் மலாய் சுனாமி இல்லாமலேயே 100 விழுக்காடு வாக்கில் மாற்றம் ஏற்பட்டாலே புதிய மத்திய அரசாங்கம் உருவாகும் என்றும் அடிப்படை வசதி காரணங்களைக் கூறி புறக்கணிக்கப்படும் சபா மற்றும் சரவாக்கின் ஆதரவு ஒருவேளை இந்த 10 விழுக்காட்டில் அடங்குமென துன் டாய்ம் கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன