கேமரன்மலை, மே 4-

கேமரன்மலை நாடாளுமன்றத் தொகுதியில் தேசிய முன்னணி சின்னத்தில் போட்டியிலும் ம.இ.கா. வேட்பாளர் டத்தோ சிவராஜ் சந்திரனின் வெற்றிக்கு துணை புரிவேன் என மைபிபிபி கட்சியின் தலைவர் டான்ஸ்ரீ கேவியஸ் கூறினார்.

கேமரன்மலை நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட மைபிபிபி கட்சி தலைமைத்துவம் முடிவு செய்தது. ஆனால் அந்த தொகுதி மீண்டும் ம.இ.கா.விற்கு வழங்கப்பட்டதில் அதிருப்தி இருந்ததையும் அவர் நினைவுறுத்தினார். ஆனால் இப்போது பொதுத் தேர்தல்தான் முக்கியம். அந்த அடிப்படையில் சிவராஜ் சந்திரனின் வெற்றிக்கு நிச்சயம் துணை புரிவதாக அவர் உறுதியளித்துள்ளார்.

கேமரன்மலையில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன். அப்போது மைபிபிபி, தேசிய முன்னணி வேட்பாளர்களுக்கு அனைத்து தொகுதியிலும் ஆதரவு வழங்க வேண்டுமென கேட்டுக் கொண்டார். குறிப்பாக கேமரன்மலை வாக்காளர்களை தேசிய முன்னணி கொண்டு வர தாம் துணை புரிய வேண்டுமென்று கேட்டுக் கொண்டார்கள்.

அந்த வகையில் சிவராஜ்சின் வெற்றிக்கு தம்மால் முடிந்த அனைத்து உதவிகளையும் செய்வதாக டான்ஸ்ரீ கேவியஸ் கூறியுள்ளார். இத்தொகுதியில் மைபிபிபி 4000 வாக்காளர்களை பதிந்தது. அவர்களின் வாக்குகளை தேசிய முன்னணிக்கு கொண்டு வர தாம் உதவி புரிவதாகவும் அவர் குறிப்பிட்டார்.