புக்கிட் ஜாலில் சதுக்கத்தின் வாகன நிறுத்துமிடம் மூடப்படுகிறது

0
10

கோலாலம்பூர், ஆக.1
29ஆவது சீ விளையாட்டுப் போட்டிக்கான இறுதி ஏற்பாடுகளுக்கு வழி விடும் பொருட்டு இந்த மாதம் முழுவதும் புக்கிட் ஜாலில் தேசிய விளையாட்டரங்கின் வாகன நிறுத்துமிடம் மூடப்படும்.

இந்த நடவடிக்கை மலேசிய அரங்க அமைப்பின் உத்தரவுக்கு ஏற்ப மேற்கொள்ளப்படுவதாக ரேபிட் கேஎல் நிறுவனம் அறிக்கையின் வாயிலாக தெரிவித்துள்ளது.

சம்பந்தப்பட்ட அமைப்பின் பரிந்துரைக்கேற்ப வாகன நிறுத்துமிட ஏ, பி, சி, டி, இ, எப் திடல்கள் மூடப்பட்டு அதற்கு பதிலாக புக்கிட் ஜாலில் தேசிய ஹாக்கி அரங்கின் பின்புறம் உள்ள விளையாட்டு மையம் திறந்து விடப்படும்.

இதில் புக்கிட் ஜாலில் எல்ஆர்டி பயனீட்டாளர்கள் தங்களின் வாகனங்களை அருகிலுள்ள எல்ஆர்டி நிறுவனங்களில் நிறுத்தலாம் என்று ரேபிட் கேஎல் அந்த அறிக்கையில் வலியுறுத்தியுள்ளது.