மலாக்காவில் திடீர் வெள்ளம்

0
9

மலாக்கா, ஆக 1 –
இன்று மாலையில் பெய்த கடும் மழையால் மலாக்காவில் உள்ள பல கிராமங்களில் திடீர் வெள்ளம் ஏற்பட்டது. இதனால் மக்கள் பெரும் அவதிக்கு ஆளாகினர்.

இன்று மாலையில் மலாக்காவின் பல இடங்களில் கன மழை பெய்தது. இதனால் தாமான் ரம்பாய் உத்தாமா, ரம்பாய் ஜெயா, பெரெதான் உலு, பந்தாய் குண்டோர், கம்போங் பக்கார், உள்ளிட்ட பல பகுதிகளில் திடீர் வெள்ளம் ஏற்பட்டது.

இதில் பந்தாய் குண்டோர் பகுதி மிக மோசமாகப் பாதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. வெள்ளத்தினால் அந்த கிராமத்தைச் சேர்ந்த 370 பேர் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர்.
பாதிக்கப்பட்ட கிராமத்தினரை நேரிடையாக சென்று நலம் விசாரித்த மாநில முதலமைச்சர் டத்தோஸ்ரீ இட்ரிஸ் ஹரூண், மக்களுக்குத் தேவையான உதவிகளை மாநில அரசு செய்யும் என தெரிவித்தார்.

மீண்டும் வெள்ளம் ஏற்படாமல் இருக்க, கால்வாய்களை அகலப்படுத்தி சீரமைக்கப்படும் என்றும் நீரை நேரடியாக மலாக்கா நீரிணையில் சேர்க்கும் வகையில் வடிவமைக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.