அண்மையச் செய்திகள்
முகப்பு > பொதுத் தேர்தல் 14 > இடைத்தேர்தலுக்கு வழிவிட பிரபாகரனை பதவி விலக சொல்வேனா? தியான் சுவா மறுப்பு
பொதுத் தேர்தல் 14முதன்மைச் செய்திகள்

இடைத்தேர்தலுக்கு வழிவிட பிரபாகரனை பதவி விலக சொல்வேனா? தியான் சுவா மறுப்பு

கோலாலம்பூர், மே 7-
மே 9இல் நடைபெறவிருக்கும் நாட்டின் 14ஆவது பொதுத்தேர்தலில் பத்து தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பை இழந்த தியான் சுவாவிற்கு பதிலாக சுயேட்சை வேட்பாளர் பிரபாகரனுக்கு நம்பிக்கைக் கூட்டணி (ஹராப்பான்) ஆதரவு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், இந்த தொகுதியில் பிரபாகரன் வெற்றி பெற்ற பிறகு தாம் இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்கு வழிவிடும் வகையில் அவரை பதவி விலக கூறுவேன் என வெளியாகியிருக்கும் செய்தியை தியான் சுவா திட்டவட்டமாக மறுத்தார்.

இது குறித்து எஃப்.எம்.டிக்கு அளித்த செய்தியில், தாம் அவ்வாறு கூறவில்லை என தியான் சுவா கூறியதோடு பொதுத்தேர்தலில் தாம் போட்டியிடுவதற்கான அனுமதி மறுக்கப்பட்டது தொடர்பில் தேர்தல் ஆணையத்தில் மனுவைத் தாக்கல் செய்வதோடு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடும் செய்யவிருப்பதாக அவர் கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன