புதன்கிழமை, ஜனவரி 29, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > பொதுத் தேர்தல் 14 > ரபிசியின் அகப்பக்கம் ஹேக் செய்யப்பட்டது; தே.மு.வினர் செய்ததாக ரபிசி குற்றச்சாட்டு
பொதுத் தேர்தல் 14முதன்மைச் செய்திகள்

ரபிசியின் அகப்பக்கம் ஹேக் செய்யப்பட்டது; தே.மு.வினர் செய்ததாக ரபிசி குற்றச்சாட்டு

கோலாலம்பூர், மே 8-

தனது அகப்பக்கத்தை சிலர் ஹேக் செய்து அதிலுள்ள முக்கிய ஆவணங்களை அழித்துள்ளதாக பி.கே.ஆர். உதவித்தலைவர் ரபிசி ரம்லி தெரிவித்தார்.

இதனை தனது அகப்பக்கத்தின் கட்டப்பாட்டு அமைப்பு தெரிவித்ததாக இன்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில் அவர் கூறினார்.

இன்று காலை மணி 10.00 முதல் ரபிசிரம்லி.கோம் எனும் எனது அகப்பக்கத்திலுள்ள நூற்றுக்கணக்கான ஆவணங்களை பார்வையிட முடியவில்லை. அவற்றை படிக்க முடியாததால் பலர் என்னை தொடர்பு கொண்டு தெரிவித்தனர்.

இது குறித்து எனது அகப்பக்கத்தின் கட்டுப்பாட்டு குழுவான டாத்தாகேஎல்.கோம் நிறுவனத்திடம் தெரியப்படுத்தினேன். மாலை மணி 4.04 அளவில் அவர்களிடமிருந்து பதில் கிடைத்தது. அதில் எனது அகப்பக்கத்திற்குள் சிலர் நுழைந்து அதிலுள்ள ஆவணங்களை அழித்துள்ளதாக அவர்கள் கூறினர். முதல்முறையாக எனது அகப்பக்கம் ஹேக் செய்யப்பட்டுள்ளது. ஆயினும், மாலை மணி 5.30 அளவில் அந்த அகப்பக்கம் மீண்டும் செயல்பட தொடங்கியதாக கூறிய அவர், இதனை தேசிய முன்னணியின் தேர்தல் கேந்திரத்தைச் சேர்ந்தவர்கள் செய்திருக்கலாம் என ரபிசி கூறினார்.

இந்த பொதுத்தேர்தலில் புத்ராஜெயாவை ஹராப்பான் கைப்பற்றினால் இது குறித்து முழுமையான விசாரணை நடத்தப்படும் என ரபிசி ரம்லி குறிப்பிட்டார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன