கோலாலம்பூர், மே 9-

ஒவ்வொரு வாரமும் நிர்ணயிக்கப்படும் பெட்ரோல், டீசல் விலையில் 7ஆவது வாரமாக எந்தவொரு மாற்றமும் இல்லை. குறிப்பாக ரோன் 95 பெட்ரோல் விலை 2.20 காசாகவே நிலைநிறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் ரோன் 97 பெட்ரோல் விலை கடந்த வாரத்தை போலவே 2.47 காசுக்கு விற்கப்படும்.

அதே போன்று டீசல் விலை கடந்த வாரத்தை போலவே 2.18 காசாக விற்கப்படும்.

இந்தப் பெட்ரோல், டீசல் விலைகள் நாளை தொடங்கி அடுத்த வாரம் 16ஆம் தேதி வரையில் அமலில் இருக்குமென உள்நாட்டு வாணிபம், கூட்டுறவு மற்றும் பயனீட்டாளர் அமைச்சு தெரிவித்துள்ளது.