திங்கட்கிழமை, ஜனவரி 20, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > பொதுத் தேர்தல் 14 > ஆட்சியமைக்க 112 தொகுதிக்கு மேல் கொண்டிருக்கிறோம்! துன் மகாதீர்
பொதுத் தேர்தல் 14முதன்மைச் செய்திகள்

ஆட்சியமைக்க 112 தொகுதிக்கு மேல் கொண்டிருக்கிறோம்! துன் மகாதீர்

பெட்டாலிங் ஜெயா, மே 10-
மத்திய அரசாங்கத்தை அமைப்பதற்கான 112 நாடாளுமன்ற தொகுதிக்கும் மேல் நாங்கள் கொண்டிருக்கின்றோம். இருப்பினும், தேர்தல் முடிவு பாரங்களில் கையெழுத்திட தேர்தல் ஆணையம் தாமதித்து வருவதாக நம்பிக்கைக் கூட்டணியின் தலைவர் துன் டாக்டர் மகாதீர் தெரிவித்தார்.

பெட்டாலிங் ஜெயாவிலுள்ள ஒரு தங்கும்விடுதியில் செய்தியாளர்கள் சந்திப்பை நடத்திய துன் மகாதீர் அக்கூட்டணி பினாங்கு, சிலாங்கூர், மலாக்கா, கெடா, நெகிரி செம்பிலான், ஜொகூர் ஆகிய மாநிலங்களைக் கைப்பற்றியிருப்பதாகவும் மேல் பாதுகாப்பான அரசாங்கத்தை அமைப்பதற்கு சபாவிலிருந்து கூடுதல் தொகுதிகளை எதிர்ப்பார்ப்பதாகவும் அவர் சொன்னார்.

தேசிய முன்னணி எங்களை விட குறைந்த தொகுதிகளைக் கொண்டிருப்பதாகவும் அவர் சொன்னார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன