பெட்டாலிங் ஜெயா, மே 10-
நேற்று நடைபெற்ற நாட்டின் 14ஆவது பொதுத்தேர்தலில் துன் மகாதீர் தலைமையிலான நம்பிக்கைக் கூட்டணி (பக்காத்தான் ஹராப்பான்) பெரும் தொகுதிகளைக் கைப்பற்றி ஆட்சியை அமைக்கவிருப்பதாக கூறப்படுகின்றது.

பின்னிரவு மணி 12.00க்கு மேல் ஆகிவிட்டாலும் தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக தேர்தல் முடிவுகளை அதிகரிக்கவில்லை. ஆனால், இது தொடர்பில் பல்வேறு தொகுதிகளிலிருந்து கிடைக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் ஹராப்பான் அதிகமான தொகுதிகளை வென்றுள்ளதாகவும் ஆட்சியமைக்கவிருப்பதாகவும் கூறப்படுகின்றது.

இந்நிலையில், துன் மகாதீர் அளித்த நேர்க்காணலில் மத்திய அரசாங்கத்தை அமைப்பதற்கான 112 நாடாளுமன்ற தொகுதிக்கும் மேல் நாங்கள் கொண்டிருக்கின்றோம். இருப்பினும், தேர்தல் முடிவு பாரங்களில் கையெழுத்திட தேர்தல் ஆணையம் தாமதித்து வருவதாக நம்பிக்கைக் தெரிவித்தார்.

பெட்டாலிங் ஜெயாவிலுள்ள ஒரு தங்கும்விடுதியில் செய்தியாளர்கள் சந்திப்பை நடத்திய துன் மகாதீர் அக்கூட்டணி பினாங்கு, சிலாங்கூர், மலாக்கா, கெடா, நெகிரி செம்பிலான், ஜொகூர் ஆகிய மாநிலங்களைக் கைப்பற்றியிருப்பதாகவும் மேல் பாதுகாப்பான அரசாங்கத்தை அமைப்பதற்கு சபாவிலிருந்து கூடுதல் தொகுதிகளை எதிர்ப்பார்ப்பதாகவும் அவர் சொன்னார்.

தேசிய முன்னணி எங்களை விட குறைந்த தொகுதிகளைக் கொண்டிருப்பதாகவும் அவர் சொன்னார்.