60 ஆண்டுகளுக்கு பிறகு புதிய ஆட்சி; சாதனை படைத்தது ஹராப்பான்

0
3

புத்ராஜெயா, மே 10-

60 ஆண்டுகளாக நீடித்து வந்த தேசிய முன்னணியின் ஆட்சி மே 9ஆம் தேதியுடன் நிறைவுக்கு வந்தது.

முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் தலைமையில் உருவான பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி முதல் முறையாக ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியுள்ளது.

நடப்பு அரசாங்கத்தை எதிர்த்து மலேசிய அரசியல் வரலாற்றில் எதிர்க்கட்சி கூட்டணி எதிர்க்கட்சி கூட்டணி ஆட்சி அமைப்பது இதுவே முதல் முறை.

பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியில் இணைந்த பெர்சத்து, பிகேஆர், ஜசெக, அமானா, வாரிசான் ஆகிய 5 கட்சிகள் மக்களின் அமோக ஆதரவில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியுள்ளன.

பக்காத்தான் ஹரப்பான் கூட்டணி 114 தொகுதிகளை (காலை மணி 3.30 நிலவரம்) பற்றிய வேளையில் சுயேட்சை வேட்பாளர்கள் 4 தொகுதிகளை கைப்பற்றியுள்ளனர். அதில் பத்து தொகுதியில் மிகப் பெரிய பெரும்பான்மையில் வெற்றிப் பெற்ற இளம் நாடாளுமன்ற உறுப்பினர் பிரபாகரனும் அடங்குவார்.

தேசிய முன்னணி அரசு 74 தொகுதிகளை கைப்பற்றிய வேளையில் பாஸ் கட்சி 17 தொகுதிகளை வென்றுள்ளது.

இதனிடையே, பினாங்கு, கெடா, ஜோகூர், சிலாங்கூர், மலாக்கா, நெகிரி செம்பிலான் ஆகிய மாநிலங்களை பக்காத்தான் ஹராப்பான் கைப்பற்றிய வேளையில் திரங்கானு, கிளாந்தானை பாஸ் வென்றுள்ளது.

பகாங், பெர்லிஸ் ஆகிய மாநிலங்களை தேசிய முன்னணி இன்னமும் தமது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது.