கோலாலம்பூர், மே 12-

நாட்டின் முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப், அவரது துணைவியார் டத்தின்ஸ்ரீ ரோஸ்மா மன்சோர் இன்று ஜகார்த்தா, இந்தோனிசியாவிற்கு செல்ல திட்டமிட்டிருந்த நிலையில் அவ்விருவரும் வெளிநாட்டிற்கு செல்ல முடியாத வகையில் அவர்களின் பெயர்களை மலேசிய குடிநுழைவுத்துறை கருப்பு பட்டியலிட்டுள்ளதாக தெரிகின்றது.

குடிநுழைவுத்துறையின் பயண குடிநுழைவு சோதணையில் அவ்விருவரின் அடையாள அட்டை எண்களைக் கொண்டு தேடியதில் இது தெரிய வந்துள்ளது. குறிப்பாக, இந்த சோதணையை மலேசியாவிலிருந்து தேடு தளம் வாயிலாக காண முடியவில்லை. அதனால், வெளிநாட்டை கொண்ட தேடுதல் வாயிலாக மலேசிய குடிநுழைவு துறையின் பயண குடிநுழைவு சோதணையில் நஜீப்-ரோஸ்மா அடையாள அட்டை எண்களைக் கொண்டு ஆராய்ந்ததில் அவ்விருவரும் அருகாமையிலுள்ள குடிநுழைவுத் துறைக்கு சொல்ல வேண்டுமென அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கு முன் எதிர்க்கட்சி தலைவர்கள் வெளிநாட்டிற்கு செல்வதை தடுக்கும் வகையில் இத்தகைய அறிவிப்பு பயண குடிநுழைவு சோதணையில் வரும். இப்பொழுது, நஜீப்-ரோஸ்மாவிற்கு இது அதேப்போன்று, காட்டுகின்றது. அவ்விருவரின் அடையாள எண்கள் மற்றும் இதர தகவல்கள் சரிதானா என்பதை உறுதிப்படுத்த மலேசிய தேர்தல் ஆணையத்தின் இணைய பக்கத்தில் பார்க்கப்பட்டதாக மலேசியாகினி செய்தி வெளியிட்டுள்ளது.

அவ்விருவரும் நாட்டை விட்டு ஓடுவதாக வெளிவந்த தகவல் வெளியானதை தொடர்ந்து இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகின்றது.