கோலாலம்பூர், மே 12-

பிரதமர் துன் டாக்டர் மகாதீர் இன்று அறிவித்த மூன்று அமைச்சர்கள் நியமனத்தில் பி.கே.ஆருடன் கலந்தாலோசிக்கபடவில்லை என அக்கட்சியின் உதவி தலைவர் ரபிஸி ரம்லி குற்றம் சாட்டியிருந்தார்.

துன் மகாதீரின் இந்த நியமனங்கள் ஹராப்பான் கட்சியிலுள்ள அனைத்து கட்சிகளிடமும் அனுமதி பெற்றியிருக்க வேண்டும். பி.கே.ஆரிடம் கலந்தாலோசிக்காமல் இந்த நியமனங்களை துன் மகாதீர் செய்துள்ளது கூட்டணி விதிமுறையை மீறுவதாக உள்ளது என அவர் கூறியதாக மலேசியாகினி செய்தி வெளியிட்டிருந்தது.

இந்நிலையில், ரபிஸியின் இந்த கருத்துக்கு பெர்சேவின் முன்னாள் தலைவரும் ஹராப்பானின் ஆதரவாளருமான அம்பிகா சீனிவாசன் கண்டனம் தெரிவித்துள்ளார். பி.கே.ஆர். இதுபோன்ற முட்டாள்தனத்தை நிறுத்திக்கொள்ள வேண்டுமென தனது டுவீட்டர் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார்.