செவ்வாய்க்கிழமை, மே 26, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > குற்றவியல் > இந்திய மாணவர்களுக்கு உபகாரச் சம்பளம்
குற்றவியல்முதன்மைச் செய்திகள்

இந்திய மாணவர்களுக்கு உபகாரச் சம்பளம்

கோலாலம்பூர், ஆக 2-

ம.இ.கா இளைஞர் பிரிவும் ஆசியா மெட்ரோ போலிடன் பல்கலைக்கழகமும் இணைந்து செய்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஆசியா மெட்ரோ போலிடன் பல்கலைக்கழகம் இந்திய மாணவர்களுக்கு கல்வி உபகாரச் சம்பளம் வழங்கியுள்ளது.

இந்த உபகாரச் சம்பளம் குறித்த தகவல் நம் இந்திய சமுதாய மாணவர்களை சென்றடைய வேண்டும் என்பதற்காக நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. அதன் தொடக்கமாக, 4 இந்திய மாணவர்களுக்கு இந்த உபாகாரச் சம்பளத்தை மஇகா இளைஞர் பிரிவு பெற்றுத் தந்தள்ளது.

இந்த மெட்ரோ போலிடன் பல்கலைக்கழகம் அனைத்து வசதிகளையும் கொண்டுள்ளதால் நம் மாணவர்கள் தங்களது கல்வியை மேற்கொள்வதற்கு வசதியாக இருக்கும் எனவும் இந்த வாய்ப்பு நமது இந்திய சமுதாய மாணவர்களை சென்றடைய வேண்டும் என்றும் மஇகாவின் தேசிய இளைஞர் பிரிவுத் தலைவர் டத்தோ சிவராஜ் சந்திரன் தெரிவித்தார்.

கீர்த்தனா த/பெ ராஜலிங்கம், கௌசல்யா த/பெ தியாகராஜன், வெஸ்லிந்த பிரியா த/பெ செல்வராஜன், சொப்னா த/பெ பீட்டர் ஆகியோருக்கு டத்தோ சிவராஜ் உபகாரச் சம்பள சான்றிதழை எடுத்து வழங்கினார்.

இந்த உபகாரச் சம்பளம் ஆசியா மெட்ரோ போலிடன் பல்கலைக்கழகத்தில் மருத்துவம், அறிவியல் சுகாதாரம், மருத்தகம் ஆகிய துறைகளில் கல்வியை மேற்கொள்ளவிருக்கும் மாணவர்களுக்கு வழங்கப்படும். எஸ்.டி.பி.எம், ஏ ஆகியவைகளில் அடைவுநிலை 3.0 வரை தேர்ச்சி பெற்றிருக்கும் மாணவர்களுக்கு இந்த உபகாரச் சம்பளம் முதன்மை வாய்ப்பாக வழங்கப்படும் என நேற்று மஇகா தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் விளக்கமளித்தார்.

இந்த வாய்ப்பை நம் சமுதாய மாணவர்கள் நிச்சயம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். நம் சமுதாயத்திற்கு கல்விதான் முதன்மை நோக்கமாக இருக்க வேண்டும். அதே வேளையில், இனி வரும் காலங்களில் நம் சமுதாயம் கல்வி கற்ற சமுதாயமாக திகழ வேண்டும் என அவர் தெரிவித்தார். இந்த வாய்ப்பை நம் சமுதாயத்திற்கு வழங்கிய ஆசியா மெட்ரோ போலிடன் பல்கலைக்கழகத்திற்கு தமது மனமார்ந்த நன்றியையும் வாழ்த்துகளையும் டத்தோ சிவராஜ் சந்திரன் தெரிவித்துக் கொண்டார்.

நேற்று நடந்த செய்தியாளர்கள் சந்திப்புக் கூட்டத்தில் ஆசியா மெட்ரோ போலிடன் பல்கலைக்கழகத்தின் விற்பனை மற்றும் மாணவர் பதிவின் முதிர்நிலை உதவித் தலைவர் மோசஸ் லிம். மஇகா இளைஞர் பிரிவின் உயர்கல்வி பிரிவுத் தலைவர் திரிபுரபவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன