அண்மையச் செய்திகள்
முகப்பு > விளையாட்டு > பார்சிலோனாவை விட்டு விலகுகிறார் நெய்மார்!
விளையாட்டு

பார்சிலோனாவை விட்டு விலகுகிறார் நெய்மார்!

மாட்ரிட், ஆக. 2-

பார்சிலோனாவின் முன்னணி நட்சத்திர ஆட்டக்காரரான நெய்மார் (வயது 25) அவ்வணியை விட்டு விலகலாம் என பார்சிலோனா அறிவித்துள்ளது. இதனிடையே 198 மில்லியன் பவுன் தொகையில் அவர் பிரான்ஸின் பிஎஸ்ஜியில் அணியில் இணைவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டதாக டெய்லி மெயில் இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

இதனிடையே அவரின் குத்தகை முடிவதற்குள் அணியை விட்டு வெளியேறுவதால் இந்த தொகை மேலும் அதிகரிக்கக்கூடுமென பேசப்படுகின்றது. பார்சிலோனா அணியின் நிர்வாகம் நெய்மாருடன் பேச்சு வார்த்தை நடத்தியது. பின்னர் அவர் அணியை விட்டு விலகுவது உறுதியென பார்சிலோனா தமது அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் செய்தி வெளியிட்டது.

இதுவரையில் அவர் பிஎஸ்ஜியில் இணையக்கூடுமென பரவலாகப் பேசப்படுகின்றது. அவர் பிஎஸ்ஜியில் இணைந்தால், உலகில் விலையுயர்ந்த ஆட்டக்காரர் என்ற அடையாளத்தை அவர் பெறுவார். இதுவரையில் மன்செஸ்டர் யுனைடெட் அணியின் பௌல் பொக்பா விலையுயர்ந்த ஆட்டக்காரராக விளங்குகிறார். அவரை ஜுவண்டெஸ் அணியிலிருந்து பெற மன்செஸ்டர் யுனைடெட் 89 மில்லியன் பவுன் தொகையை செலவிட்டது.

நெய்மார் பார்சிலோனா அணியிலிருந்து வெளியேறும் பட்சத்தில் லிவர்பூலின் கொந்தினியோ மற்றும் அட்லெண்டிகோ மாட்ரிட் அணியின் கிறிஸ்மேன் ஆகியோரை அவ்வணி குறி வைக்குமென பேசப்படுகின்றது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன