அண்மையச் செய்திகள்
முகப்பு > முதன்மைச் செய்திகள் > எண் கணித நிபுணர் மீது 13 மோசடி புகார்
முதன்மைச் செய்திகள்

எண் கணித நிபுணர் மீது 13 மோசடி புகார்

கோலாலம்பூர், ஆக 2-

எண் கணிதம் வாயிலாக எதிர்காலத்தை மாற்றுவதாக கூறி மோசடி செய்ததாக எண் கணித நிபுணர் ஒருவர் மீது 13 புகார்களை போலீஸ் பெற்றுள்ளது.  டாக்டர் உதயா அல்லது முதையா என்ற பெயரில் அடிக்கடி தொலைகாட்சியிலும் வானொலியிலும் எண் கணிதம் தொடர்பாக உரையாற்றி வரும் அவர் பலரை நம்ப வைத்து மோசடி செய்ததாகத் தெரிகிறது. 2001ஆம் ஆண்டிலிருந்து அவர் இக்குற்றத்தை புரிந்ததாக தெரிகிறது.

இவர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் 5 ஆண்டுகள் சிறை அல்லது அபராதம் அல்லது இவை இரண்டும் விதிக்கப்படலாம்.  இதனிடையே, தாஜுடின் ஜமால் முகமட் என்ற இந்த ஆடவர் மீது ஏற்கனவே தங்காக் நீதிமன்றத்தில் ஜூலை 19ஆம் தேதி குற்றஞ்சாட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

தங்காக்கில் உள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் மாஜிஸ்திரேட் என்.டி.அருண் முன்னிலையில் அந்த ஆடவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது. சுயநலத்திற்காக வெ.52,000 பணத்தை தவறாகப் பயன்படுத்தியதாகவும் கடந்த ஆண்டு ஜூலை மாதம் தாமான் தங்காக் ஜெயாவில் உள்ள வீடொன்றில் தாஜூடின் ஜமால் முகமட் அக்குற்றத்தைப் புரிந்ததாக கூறப்பட்டது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன