திங்கட்கிழமை, ஜனவரி 20, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > அரசியல் > மைபிபிபி அலுவலகம் தாக்கப்பட்டது! ஃபேஸ்க்கில் நேரலையில் விளக்கிய கேவியஸ்
அரசியல்முதன்மைச் செய்திகள்

மைபிபிபி அலுவலகம் தாக்கப்பட்டது! ஃபேஸ்க்கில் நேரலையில் விளக்கிய கேவியஸ்

கோலாலம்பூர், மே 15-
மைபிபிபி கட்சியின் தலைவர் டான்ஸ்ரீ கேவியஸின் அலுவலகம் அடித்து நொறுக்கப்பட்டதாக அவர் ஃபேஸ்புக்கில் அவர் நேரலையாக புகார் தெரிவித்தார். மைபிபிபி தலைமையகத்தின் 5ஆவது மாடியில் கேவியஸ்சின் அலுவலகம் உள்ளது. இன்று அவருடைய அலுவலகத்தில் நுழைந்த போது அனைத்து பொருட்களும் அடித்து நொறுக்கப்பட்டது மைபிபிபியின் முதன்மை ஆவணங்கள் அங்கிருந்து எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

குறிப்பாக பல ஆண்டுகளாக தாம் சேமித்து வைத்த நினைவுப் பரிசுகள், தம் அப்பாவின் நினைவாக வைத்திருந்த பொருட்கள் என எதையும் அவர்கள் விட்டு வைக்கவில்லையென ஃபேஸ்புக் லைப்பில் டான்ஸ்ரீ கேவியஸ் குற்றம் சாட்டியுள்ளார். குறிப்பாக குண்டர் கும்பலின் அராஜகம் என்று குறிப்பிட்டுள்ள அவர் சட்டவிதி முறைகளை கடைப்பிடிக்க இவர்கள் தவறி விட்டார்கள்.

இடைக்கால தலைவர் என கூறிக்கொள்ளும் டத்தோஸ்ரீ மெக்லின் டிகுரூஸ், டத்தோ மோகன் கந்தசாமி, சத்தியா சுதாகரன் இவர்கள் மூவரும் தான் அலுவலகம் சூரையாடப்பட்டதற்கு காரணம் என கேவியஸ் குற்றம் சாட்டியுள்ளார்.

மைபிபிபியின் உச்ச மன்றம் டான்ஸ்ரீ கேவியஸை அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கி விட்டதாக கட்சியின் செயலாளர் டத்தோ மோகன் கந்தசாமி அண்மையில் கூறியிருந்தார். அது மறு உறுதி செய்யப்படுவதாக கடந்த வாரம் கட்சியின் தகவல் பிரிவு தலைவர் டத்தோ சைமன் தெரிவித்தார். இந்நிலையில் தாம் தான் இன்னும் மைபிபிபி கட்சியின் தலைவர் என்றும் அதனை சங்கங்களின் பதிவிலாக்கா ஆர்.ஓ.எஸ். அறிவிக்கும் என டான்ஸ்ரீ கேவியஸ் கூறி வந்தார்.

இச்சூழ்நிலையில் மைபிபிபி தலைமையகத்தில் நடந்த இந்த அராஜகச் செயல் சட்டத்திற்கு புறம்பானது என்றும் ஆர்.ஓ.எஸ். முடிவு வரும் வரை இவர்களால் ஏன் காத்திருக்க முடியவில்லை என்றும் கேவியஸ் கேள்வி எழுப்பினார்.

இந்த விவகாரம் தொடர்பில் தாம் போலீஸ் புகாரை மேற்கொள்ள விருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

Part 2, continue as video error

Posted by Tan Sri M Kayveas on Tuesday, May 15, 2018

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன