அண்மையச் செய்திகள்
முகப்பு > முதன்மைச் செய்திகள் > வீடுகளை உடைக்கவிடமாட்டோம்
முதன்மைச் செய்திகள்

வீடுகளை உடைக்கவிடமாட்டோம்

கோலாலம்பூர், ஆக. 2-

எங்கள் வீடுகள் உடைக்கப்படாமல் இருக்க இறுதி வரை போராடுவோம். இதில் இருந்து ஒரு போதும் பின் வாங்கமாட்டோம் என்று ஜிஞ்சாங் செலாத்தான் தம்பஹான் மக்கள் நேற்று சூளுரைத்தனர். வீடுகளைக் காலி செய்யும்படி எங்களுக்கு நெருக்குதல் கொடுக்க வேண்டாம். மாற்று வீடுகள் உள்ளிட்ட எங்கள் கோரிக்கைகளை மேம்பாட்டு நிறுவனம் முதலில் ஏற்றுக்கொள்ள வேண்டும் என இந்தக் குடியிருப்பின் மக்கள் சங்கத் தலைவர் ஏ.பொன்னாம்பலம் தெரிவித்தார்.

கோலாலம்பூர் மாநகர் மன்ற அதிகாரிகள் கடந்து ஆக. முதல் தேதி அங்கு வசித்த மக்களுக்கு நோட்டீஸ் கொடுத்துள்ளனர். வீடுகளைக் காலி செய்யும் படி அதில் கூறப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று காலை 9.30 மணியளவில் மண்வாரி வாகனத்துடன் கோலாலம்பூர் மாநகர் மன்றத்தின் 50 பணியாளர்கள் அக்குடியிருப்புக்கு வந்தனர். சுமார் 40 போலீஸ்காரர்களும் அங்கு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

எங்கள் வீடுகளை உடைப்பதற்காகவே அவர்கள் அங்கு வந்தனர் என்று பொன்னம்பலம் கூறினார். இதனைத் தொடர்ந்து குடியிருப்பேர் அங்கு திரண்டு வந்து எதிர்ப்பு தெரிவித்தனர். போலீசுடன் பேச்சு நடத்தியப் பிறகு எங்கள் தரப்பு நியாயத்தை எடுத்துச் சொன்னோம். நீதிமன்ற உத்தரவு இன்றி வீடுகளை உடைக்க முடியாது என கூறினோம் என்றார் பொன்னாம்பலம்.

நீதிமன்ற ஆணை இன்றி எப்படி வீடுகளை உடைக்க முடியும் என அங்கு வசிக்கும் மக்கள் கேள்வி எழுப்பினர். சுஹாகாம் ஆணையர் டத்தோ லோக் இம் பெங், பி.எஸ்.எம். கட்சியின் மத்திய செயலவை உறுப்பினர் அருட்செல்வம், ஜிஞ்சாங் செலாத்தான் தம்பஹான் மஇகாவின் கரு, சமூகத் தொண்டர் அப்துல் குலுப், வழக்கறிஞர் பால் ஆகியோரும் இக்குடியிருப்பின் மக்களுக்கு ஆதரவாக களமிறங்கினர். எங்களுடைய நியாயமான கோரிக்கைகளை ஏற்றுக் கொள்ளாத வரையில் வீடுகளைக் காலி செய்யமாட்டோம் என குடியிருப்போர் தெரிவித்தனர்.a

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன