அண்மையச் செய்திகள்
முகப்பு > அரசியல் > 3ஆம் தவணையாக துணை முதலமைச்சராக பொறுப்பேற்றார் பேராசிரியர் ராமசாமி
அரசியல்மற்றவைமுதன்மைச் செய்திகள்

3ஆம் தவணையாக துணை முதலமைச்சராக பொறுப்பேற்றார் பேராசிரியர் ராமசாமி

ஜோர்ஜ்டவுன், மே 16-
கடந்த வாரம் நடைபெற்ற நாட்டின் 14ஆவது பொதுத்தேர்தலில் நம்பிக்கைக் கூட்டணி வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை தக்க வைத்துக்கொண்டது. இந்நிலையில், அக்கூட்டணியைச் சேர்ந்த பிராய் சட்டமன்ற உறுப்பினர் பேராசிரியர் ராமசாமி மூன்றாவது தவணையாக மாநில துணை முதலமைச்சராக இன்று பொறுப்பேற்றுக்கொண்டார்.

முன்னராக, முதலாவது துணை முதலமைச்சராக பினாங் துங்கால் சட்டமன்ற உறுப்பினர் டத்தோ ஐ.ஆர். ஜாக்கியுடின் அப்துல் ரஹ்மான் பொறுப்பேற்றுக்கொண்டார். மொத்தம் 11 பேர் ஆட்சிக்குழு உறுப்பினர்களாக பொறுப்பேற்றுக்கொண்ட நிலையில் அவர்களில் ஐவர் புதிய முகங்களாவர்.

இந்த பதவியேற்பு சடங்கு டேவான் ஸ்ரீ பினாங்கில் மாநில ஆளுநர் துன் அப்துல் ரஹ்மான் அப்பாஸ், மாநில முதலமைச்சர் சோவ் கோன் யியோ ஆகிய இருவரின் முன்னிலையில் நடைபெற்றது.

முதலமைச்சர் சோவ் கோன் யியோ நில விவகாரம், நில மேம்பாடு, போக்குவரத்து மற்றும் தகவல் பிரிவு ஆகியவற்றிற்கான பொறுப்புகளை ஏற்றுக்கொண்ட நிலையில் டத்தோ ஐ.ஆர். ஜாக்கியுடின் அப்துல் ரஹ்மான் இஸ்லாமிய விவகாரம், தொழில்துறை மேம்பாடு மற்றும் சமூக தொடர்பு ஆகியவற்றுக்கான பொறுப்புகளை ஏற்றுக்கொண்டார்.

துணை முதலமைச்சர் பேராசிரியர் ராமசாமி மாநில பொருளாதார திட்டமிடல், கல்வி, மனித மூலதனம், அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கம் ஆகியவற்றிற்கான பொறுப்பை ஏற்றுக்கொண்ட நிலையில் சோங் எங் மகளிர் மற்றும் குடும்ப மேம்பாடு, பாலின உள்ளடக்கம் மற்றும் இஸ்லாம் அல்லாத சமயம் ஆகியவற்றிற்கான பொறுப்புகளை ஏற்றுக்கொண்டுள்ளார்.

ஜேக்டீப் சிங் ஊராட்சித்துறை, வீடமைப்பு, நகர்புறம் மற்றும் கிராமப்புற மேம்பாடு ஆகியவற்றிற்கான பொறுப்புகளையும் பீ பூன் போ சமூகநலம், பரிவுமிக்க சமுதாயம் மற்றும் சுற்றுச்சூழல் ஆகியவற்றுக்கான பொறுப்புகளையும் டாக்டர் அபிப் பஹார்டின் சுகாதாரம், விவசாயம் மற்றும் அது சார்ந்த தொழில்துறை, புறநகர் மேம்பாடு ஆகியவற்றுக்கான பொறுப்புகளை ஏற்றுக்கொண்டார்.

ஜைரில் கீர் ஜொஹாரி பொதுப்பணி, பயன்பாடு மற்றும் வெள்ளத் தடுப்பு பிரிவு ஆகியவற்றிற்கான பொறுப்புகளையும் டத்தோ ஹலிம் ஹுசேன் அனைத்துலக மற்றும் உள்நாட்டு வாணிபம், பயனீட்டாளர் விவகாரம், தொழில்முனைவர் மேம்பாடு ஆகியவற்றிகான பொறுப்புகளையும் யியூ சூன் ஹின் சுற்றுலா மேம்பாடு மற்றும் பாரம்பரியம், கலை கலாச்சார பிரிவு ஆகியவற்றிற்கான பொறுப்புகளையும் சூன் லிப் சீ இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறைக்கான பொறுப்புகளை ஏற்றுக்கொண்டுள்ளனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன