கோலாலம்பூர், மே 16-

டத்தோஸ்ரீ நஜீப் கொண்டுவந்த ஒரே மலேசியா சுலோகம் மாற்றப்படுமெனவும் இனி, சலாம் சத்து மலேசியா, சலாம் நெகாராக்கூ, சலாம் நெகாராக்கூ மலேசியா ஆகியவற்றைப் பயன்படுத்தக்கூடாது எனவும் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் தெரிவித்தார்.

இவற்றுக்கு பதிலாக அசாலாமுவலைக்கூம் அல்லது சலாம் செஜாத்தேரா ஆகியவற்றை பயன்படுத்தப்பட வேண்டுமென அவர் கூறினார்.

ஒரே மலேசியா சுலோகத்தை மாற்றும் நிலைப்பாட்டில் உள்ளோம். ஆனால், இதுவரையில் அதற்கான மற்றொரு சுலோகத்தை நாங்கள் இன்னமும் கண்டறியவில்லை என்றார் அவர்.

நாம் அனைவரும் மலேசியர்கள் என்பதை பிரதிபலிக்க ஒரே மலேசியா எனும் சுலோகத்தை 2009ஆம் ஆண்டு ஏப்ரல் 2ஆம் தேதி மலேசியாவின் 6 ஆவது பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் அறிமுகப்படுத்தினார்.

முன்னதாக மலேசியாவின் 4ஆவது பிரதமராக துன் டாக்டர் மகாதீர் 2020 தூர நோக்கு சிந்தனையை அறிமுகப்படுத்தினார். தற்போது மீண்டும் பிரதமர் பொறுப்பில் அமர்ந்திருக்கும் துன் மகாதீர், ஒரே மலேசியா சுலோகம் மாற்றப்படுமென கூறியுள்ளார்.