அண்மையச் செய்திகள்
முகப்பு > அரசியல் > நஜீப் வீட்டிலிருந்து கைப்பை, துணிமணிகள் பறிமுதல்
அரசியல்முதன்மைச் செய்திகள்

நஜீப் வீட்டிலிருந்து கைப்பை, துணிமணிகள் பறிமுதல்

கோலாலம்பூர், மே 17-
இங்குள்ள தாமான் டூத்தா, ஜாலான் லங்காக் டூத்தாவிலுள்ள முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக்கின் வீட்டிலிருந்து கைப்பை, துணிமணிகள் மற்றும் பரிசுப் பொருள்கள் இன்று பறிமுதல் செய்யப்பட்டன.

இன்று அதிகாலை 4.20 மணியளவில் இந்தப் பொருட்கள் யாவும் பறிமுதல் செய்யப்பட்டன. ஆனால், ஆவணங்கள் ஏதும் எடுக்கப்படவில்லைஎன்று நஜீப்பின் வழக்கறிஞர் டத்தோ ஹர்ப்பால் சிங் கிரேவால் தெரிவித்துள்ளார்.

2001ஆம் ஆண்டு கருப்புப் பணம் தடுப்புச் சட்டத்தின் கீழ் விசாரணை செய்வதற்காகத்தான் இந்தப் பொருள்கள் அனைத்தும் எடுத்துச் செல்லப்பட்டது என்று நஜீப்பின் வீட்டிலிருந்து வெளியேறிய பின்னர் டத்தோ ஹர்ப்பால் சிங் செய்தியாளர்களிடம் இவ்வாறு குறிப்பிட்டார்.

இந்த சோதனை நடவடிக்கையின் பொது நஜீப் குடும்பத்தினர் அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்கியதாகவும் இதில் யாரும் கைது செய்யப்படவில்லை என்று அவர் சொன்னார்.

இதனிடையே, ஜாலான் ராஜா சூலானிலுள்ள நஜீப்பின் மற்றொரு ஆடம்பர அடுக்ககத்திலும் போலீசார் சோதனை நடவடிக்கை மேற்கொண்டனர். அங்கிருந்து பெட்டிகள் உட்பட பல பொருட்கள் வெளியே கொண்டு வரப்பட்டன. இங்கு மேற்கொண்ட சோதனை நடவடிக்கை இன்று அதிகாலை 3.00 மணிக்கு முடிவுற்றதாக ஹர்ப்பால் அவர் தெரிவித்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன