முகப்பு > அரசியல் > குலாவிற்கு மனிதவள அமைச்சு, கோபிந்த் சிங்கிற்கு தொடர்பு மற்றும் பல்லூடக அமைச்சு
அரசியல்மற்றவைமுதன்மைச் செய்திகள்

குலாவிற்கு மனிதவள அமைச்சு, கோபிந்த் சிங்கிற்கு தொடர்பு மற்றும் பல்லூடக அமைச்சு

கோலாலம்பூர், மே 18-

பிரதமர் துன் டாக்டர் மகாதீர் இன்று மாமன்னரை இஸ்தானா நெகாராவில் சந்தித்து தனது அமைச்சரவையின் பெயர் பட்டியலை வழங்கினார்.

இந்த நியமனங்கள் கூட்டரசு அரசியலைப்பு சட்டத்தின் விவகாரம் 43 பிரிவு (2), பத்தி (பி)யின் கீழ் மேற்கொள்ளப்படுகின்றது.

பிரதமர் துன் மகாதீர் வழங்கிய அமைச்சரவை பட்டியல் பின்வருமாறு:-

பிரதமர்
1. துன் டாக்டர் மகாதீர்
துணைப்பிரதமர்
2. டத்தோஸ்ரீ டாக்டர் வான் அசிஸா

அமைச்சர்கள்
பெர்சாத்து
3. உள்துறை அமைச்சர்
டான்ஸ்ரீ முகைதீன் யாசின்
4. கல்வியமைச்சர்
டாக்டர் மஸ்லீ மாலிக்
5. புறநகர் மேம்பாட்டு அமைச்சர்
ரீனா ஹருண்

பி.கே.ஆர்
6. மகளி மற்றும் குடும்ப மேம்பாட்டு அமைச்சர்
டத்தோஸ்ரீ டாக்டர் வான் அசிஸா
7. பொருளாதார விவகார அமைச்சர்
டத்தோஸ்ரீ அஸ்மின் அலி
8. வீடமைப்பு மற்றும் ஊராட்சித்துறை அமைச்சர்
டத்தோ ஜூராய்டா

ஜ.செ.க.
9. நிதியமைச்சர்
லிம் குவாங் எங்
10. போக்குவரத்துறை அமைச்சர் அந்தோனி லோக் சியூ பூக்
11. தொடர்பு மற்றும் பல்லூடக அமைச்சர்
கோபிந்த் சிங் டியோ
12. மனிதவள அமைச்சர்
குலசேகரன் முருகேசன்

அமானா
13. தற்காப்புத்துறை
ஹாஜி முகமட் பின் சாபு
14. விவசாயம் மற்றும் அது சார்ந்த தொழில்துறை அமைச்சர்
ஹாஜி சாலாஹுடின் ஆயுப்
15. சுகாதார அமைச்சர்
டாக்டர் ஹாஜி சூல்கிப்ளி பின் அஹ்மாட்

இந்த நியமனங்களுக்கு மாமன்னர் ஒப்புதல் அளித்து விட்டார். இந்த அமைச்சரவை பதவியேற்பு சடங்கு மே 21ஆம் தேதி திங்கள்கிழமை காலை மணி 11.30க்கு இஸ்தானா நெகாராவில் நடைபெறுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன