திங்கட்கிழமை, ஜனவரி 20, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > அரசியல் > அரசியலில்தான் ம.இ.கா. தோற்றது; சேவையில் அல்ல! டான்ஸ்ரீ விக்கினேஸ்வரன்
அரசியல்மற்றவைமுதன்மைச் செய்திகள்

அரசியலில்தான் ம.இ.கா. தோற்றது; சேவையில் அல்ல! டான்ஸ்ரீ விக்கினேஸ்வரன்

கோலாலம்பூர், மே 19-

கடந்த பொதுத்தேர்தலில் ம.இ.கா. தோல்வி கண்டு விட்டது. நாம் மக்கள் சேவையில் தோற்கவில்லை. அரசியலில்தான் தோற்றோம் என ம.இ.கா. உதவித் தலைவரும் மேலவைத் தலைவருமான டான்ஸ்ரீ விக்கினேஸ்வரன் தெரிவித்தார்.

இந்திய சமூகத்திற்கான தேவைகளில் கவனம் செலுத்தி வந்த நாம், நமது கட்சியிலுள்ள கிளைகளின் உறுப்பினர்களின் தேவைகளை கவனிக்க தவறி விட்டோம். இல்லையென்றால், கிட்டத்தட்ட 5 லட்ச வாக்குகள் நமது கட்சி வேட்பாளர்களுக்கு கிடைத்திருக்கும். நாம் மக்கள் சேவையில் ஈடுபட்டு வந்த போது அப்போதைய எதிர்கட்சியினர் பெரிதாக ஒன்றும் செய்யவில்லை. அவர்கள் நமக்கு எதிராக பல்வேறு வீடியோக்களை செய்து வாட்சாப் உள்ளிட்ட சமூகவலைத் தளங்களில் பரப்பினர்.

இப்போது நாம் எதிர்கட்சியாகி விட்டதால் நாம் சுதந்திரமாக இந்திய சமூகத்திற்காக நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பலாம். நம்பிக்கைக் கூட்டணி அரசாங்கம் இந்திய சமூகத்திற்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதை நாம் உறுதி செய்வதோடு அப்படி அவர்கள் செய்யாவிட்டால் நாம் அது குறித்து தைரியமாக குரலெழுப்ப முடியும். வரும் கட்சித் தேர்தலில் தேசிய தலைவராக வெற்றி பெற்றால் கட்சியில் குறிப்பாக, கிளை உறுப்பினர்கள் மற்றும் தலைவர்களுக்கு மறுமலர்ச்சியை ஏற்படுத்துவேன் என டான்ஸ்ரீ விக்கினேஸ்வரன் உறுதியளித்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன