முகப்பு > மற்றவை > சரவாக் ரிப்போர்ட் ஆசிரியர் மலேசியாவில் சுதந்திரமாக நுழையலாம்!
மற்றவைமுதன்மைச் செய்திகள்

சரவாக் ரிப்போர்ட் ஆசிரியர் மலேசியாவில் சுதந்திரமாக நுழையலாம்!

பெட்டாலிங் ஜெயா, மே 19-
சட்டவிரோதமாக முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக்கின் ஆட்சியைக் கவிழ்க்க முயன்றதாக குற்றம் சாட்டப்பட்ட சரவாக் ரிப்போர்ட் ஆசிரியர் கிளேர் ரியூகாஸ்டல்-பிரோவ்ன் இனி, சுதந்திரமாக மலேசியாவில் நுழையலாம்.

கடந்த 2015ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் புக்கிட் அமான் செக்ஷன் 124பி மற்றும் குற்றவியல் சட்டவிதி 1241 ஆகிய சட்டங்களின் கீழ் அவர் மீது கைது ஆணையை பிறப்பித்தது.

நாட்டின் ஜனநாயக நாடாளுமன்றத்தை சீர்குலைப்பதற்காக கிளேர் முயன்றதாக விசாரணைக்காக தேடப்பட்டார். மேலும், நாட்டின் பொது அமைதிக்கு ஊறு விளைவிக்கும் வகையில் அவர் போலியான அறிக்கையை வெளியிட்ட குற்றச்சாட்டிற்காகவும் கிளேர் போலீசாரால் விசாரணைக்கு அழைக்கப்பட்டார்.

ஆனால், 14ஆம் பொதுத்தேர்தலுக்கு பின்னர் நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு கிளேரின் நிலையும் தற்போது மாறியுள்ளது. தற்போது, அவர் மலேசியாவிற்குள் நுழைவதற்கு அனுமதிக்கப்பட்டார். நேற்று கே.எ.ஐ.ஏ. விமான நிலையத்தில் குடிநுழைவுத்துறைக்கு தாம் வந்த போது ஒருவித அச்சத்துடன் வந்ததாக கூறிய அவர், எவ்வித தடைகளும் இன்றி தாம் மலேசியாவிற்குள் நுழைவதற்கு அனுமதிக்கப்பட்டது மகிழ்ச்சியான தருணமாக இருப்பதாக தெரிவித்தார்.

தன் மீதான குற்றச்சாட்டுகள் நீக்கப்பட்டுள்ளதாக தாம் நம்புவதாகவும் அவர் சொன்னார். மேலும், என்னை நாடு கடத்த மலேசியா கூறுவதாக இண்டர்போல் இனியும் தெரிவிக்காது என நினைக்கின்றேன். மலேசியாவிற்கு தனது சொந்த வேலையாகவும் நண்பர்களை பார்ப்பதற்காகவும் தாம் வந்திருப்பதாக கிளேர் குறிப்பிட்டார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன