ஈழ தமிழ் பெண் ஒலிவியாவுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் கொடுத்த கெளரவம் ..!

0
12

ஒலிவியா தனபாலசிங்கம் என்ற ஈழத்தமிழ் வீணைக் கலைஞர் மீட்டிய வீணை இசையினை உலகப் புகழ்பெற்ற ஒஸ்கார் விருதை வெற்றிபெற்ற இசையமைப்பாளர் A.R.ரகுமான் கெளரவித்துள்ளார்.

A.R.ரகுமான் தனது முகப்புத்தகம் மற்றும் டுவிட்டர் பக்கங்களில் ஒலிவியாவின் இசைக் காணொளியைப் பகிர்ந்துள்ளார். இதற்கு ஒலிவியா தனது முகப்புத்தக பக்கத்தில் A.R.ரகுமானுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

A.R.ரகுமான் இக் காணொளியை பகிர்ந்ததன் மூலம் அவரது சமூக வலையமைப்பினுள் உள்ள நாற்பது மில்லியனுக்கும் மேற்பட்ட இசை ரசிகர்களுக்கு ஒலிவியாவின் இசையை தெரியப்படுத்தியுள்ளார்.

அண்மையில் A.R.ரஹ்மான் இசையில் வெளிவந்த காற்று வெளியிடை திரைப்படத்தில் அனைவராலும் ரசிக்கப்பட்ட ’சரட்டு வண்டில..’ என்ற பாடலை ஒலிவியா வீணையில் மீட்டியிருந்ததோடு அதனை தனது முகப்புத்தகத்திலும் பதிவேற்றம் செய்திருந்தார்.
தனது இசை மீழுருவாக்கம் செய்யப்பட்ட விதத்தினை ரசித்த ரகுமான் அதனைத் தனது ரசிகர்களிடையேயும் பகிர்ந்துள்ளார்.

ஈழத் தமிழ் குடும்பத்தைச் சேர்ந்த ஒலிவியா ஜெர்மனில் பிறந்தவராவர். இவர் வீணைக் கலை மற்றும் பரத நாட்டியக்கலை என்பவற்றை முறைப்படி கற்றுத் தேர்ந்துள்ளமை விசேஷ அம்சமாகும்.