அண்மையச் செய்திகள்
முகப்பு > குற்றவியல் > பொதுத்தேர்தலில் நஜீப் வெற்றிக்காக தாய்லாந்து, புக்கெட்டில் காத்திருந்த ஜோ லோ!
குற்றவியல்மற்றவைமுதன்மைச் செய்திகள்

பொதுத்தேர்தலில் நஜீப் வெற்றிக்காக தாய்லாந்து, புக்கெட்டில் காத்திருந்த ஜோ லோ!

கோலாலம்பூர், மே 21-
1எம்.டி.பி. ஊழலுக்கு பின்னணியாக இருந்ததாக கூறப்படும் பினாங்கைச் சேர்ந்தவரான ஜோ லோ என்று அறியப்படும் லோ தேக் ஜோ அண்மையில் நடைபெற்ற நாட்டின் 14ஆவது பொதுத்தேர்தலுக்கு சில நாட்கள் முன்புவரை தாய்லாந்திலுள்ள புக்கெட்டில் இருந்ததாக டெ வால் ஸ்ட்ரீட் ஜூர்னல் செய்தி வெளியிட்டுள்ளது.

ஆயினும், இந்த தேர்தல் முடிவு முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப்பிற்கு சாதகமாக கிடைக்காத நிலையில் அவர் அங்கிருந்து தலைமறைவாகிவிட்டதாகவும் அவரை ராடார் வாயிலாக கண்டறிய முடியவில்லை என்றும் அந்த சஞ்சிகை குறிப்பிட்டுள்ளது.

1எம்.டி.பி முறைகேடு தொடர்பில் அமெரிக்காவின் நீதித்துறை விசாரணையை மேற்கொண்டு வந்தாலும் அவர் அதற்கு அஞ்சாமல் மிகுந்த நம்பிக்கையுடன் கப்பல் பயணங்கள் வாயிலாக ஆசியாவைச் சுற்றிக்கொண்டிருந்ததாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.

கடந்த பிப்ரவரி மாதம் அவர் தனது பிரபல நண்பர்களுடன் சீனா மாச்சாவிலுள்ள சூதாட்ட தீவில் கொண்டாட்டமாக இருந்ததாகவும் 1எம்.டி.பி. முறைகேட்டில் தன்னுடன் சம்பந்தப்பட்டுள்ள தனது நண்மர் எரிக் டான்னின் பிறந்தநாளை மாச்சாவ் தங்கும்விடுதியில் அவர் ஏற்பாடு செய்திருந்ததாகவும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன. அவர்களை மகிழ்ச்சி படுத்த ஹிப் போம் சுவிஸ் பீட்ஸ், பாடகி நிக்கோல் சேர்சிங்கர் அந்த தீவுக்கு வந்ததாகவும் கூறப்படுகின்றது.

பொதுத்தேர்தலில் தனது நண்பர் டத்தோஸ்ரீ நஜீப் வெற்றி பெற்று விடுவார் என ஜோ லோ நினைத்தார். ஆனால், அவர் தோல்வி கண்டு ஆட்சி அதிகாரத்தை இழந்தவுடன் ஜோ லோ தாய்லாந்திலிருந்து வெளியேறி விட்டதாகவும் அவர் தற்போது மிகுந்த எச்சரிக்கையுடன் இருப்பதாகவும் அந்த சஞ்சிகையில் கூறப்பட்டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன