சமீபத்தில் வெளியான `காளி’ படத்தில் அஞ்சலியின் கதாபாத்திரத்திற்கு பாராட்டுக்கள் குவிந்து வரும் நிலையில், அஞ்சலி நடிப்பில் அடுத்ததாக `பேரன்பு’ படம் விரைவில் ரிலீசாக இருக்கிறது.

அஞ்சலி தற்போது `நாடோடிகள்-2′ படத்தில் நடித்து முடித்திருக்கிறார். அடுத்ததாக விஜய் சேதுபதி ஜோடியாக பெயரிடப்படாத படம் ஒன்றில் நடிக்க இருக்கிறார். விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்க இருக்கும் நிலையில், அஞ்சலியின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

அஞ்சலி அடுத்ததாக `லிசா’ என்ற திகில் கலந்த த்ரில்லர் படத்தில் நடிக்க இருக்கிறார். இந்தியாவின் முதல் ஸ்டெரோஸ்கோபிக் 3டி படமாக உருவாகும் இந்த படத்தை ராஜூ விஸ்வநாத் இயக்குகிறார். பி.ஜி.மீடியா ஒர்க்ஸ் சார்பில் `மதுரவீரன்’ படத்தை இயக்கிய பி.ஜி.முத்தையா தயாரிக்கும் இந்த படத்திற்கு சந்தோஷ் தயாநிதி இசையமைக்கிறார். இவர் `மதுரவீரன்’ படத்திற்கு இசையமைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க இருக்கிறது.